இந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ள போகிறாரா?.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்த உலகநாயகன்..
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே தனக்கென ஒரு தன்னிகரற்ற இடத்தை பிடித்து பல பேருக்கு நடிப்பில் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் நடிகர் கமல். இவரின் சினிமா அறிவு அனைவரையும் பிரமிக்க வைப்பது. 60 ஆண்டுகளாக சினிமா பற்றிய அறிவை பெற்றிருந்தாலும் இன்னும் ஏதாவது கற்க வேண்டும் என்ற அந்த ஒரு தாகத்திலேயே இருந்து வருகிறார் கமல்.
கமலின் லைன் அப்
ஒரு பக்கம் நடிப்பின் மீது ஆர்வம், ஒரு பக்கம் கட்சிப்பணி, ஒரு பக்கம் பல படங்களை தயாரிக்கும் பணி என மும்முரமாக பம்பரமாக சுழன்று கொண்டே இருக்கிறார். கமல் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
அதற்காக இரவு பகல் பாராமல் தன் முழு ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளரும் இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் நாள் தோறும் தனது யுடியூப் சேனல் மூலம் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி டூரிங் டாக்கீஸ்.
ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை
இந்த நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்களை நேர்காணல் மூலம் சந்தித்து ரசிகர்களுக்கு தேவையான பல தகவல்களை கொடுத்து வருகிறார் சித்ரா லட்சுமணன். இந்த நிகழ்ச்சியில் லென்ஸ் என்ற மற்றுமொரு நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படுகிறது. அது ரசிகர்களின் கேள்வி பதில் சம்பந்தமான நிகழ்ச்சி என்பதால் பல ரசிகர்கள் அதிகமான கேட்ட கேள்வி என்னவென்றால் ‘உங்கள் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் எப்போது பங்கு கொள்ளப் போகிறார்?’ என்பது தான்.
இதை சித்ரா லட்சுமணன் சமீபத்தில் கமலை சந்தித்து பேசும் போது இதைப் பற்றி கேட்டிருக்கிறார். அப்போது கூறிய கமல் இந்த மாத இறுதியில் கமல் லண்டன் செல்கிறாராம். மீண்டும் அடுத்த மாதம் தான் சென்னைக்கு வருவாராம். சென்னையில் இரண்டு நாள்கள் மட்டும் தங்கிவிட்டு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு செல்ல இருக்கிறாராம்.
ரசிகர்களை சந்திக்கும் கமல்
அதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்ததும் கண்டிப்பாக மே மாதம் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம் என்று கமல் சித்ரா லட்சுமணனிடம் கூறியிருக்கிறார். டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி. இதில் கமல் கலந்து கொள்ள போவது இன்னும் கூடுதல் சிறப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க : ‘கைதி’ பட இசையமைப்பாளருக்கா இப்படி ஒரு நிலைமை?.. அவர் எடுத்த திடீர் முடிவு!..