தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகராக கமல் இருந்து வருகிறார். அவரின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகிவிட்டது. இப்போது சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைகிறார். அவருக்கு ஜோடியாக அந்தப் படத்தில் சாய்பல்லவி நடிக்கிறார். இந்த நிலையில் மாவீரன் படத்தில் கமலை எப்படியாவது நுழைக்க வேண்டும் என படக்குழு நினைத்திருக்கிறார்களாம்.
அதற்கு ஒரே வழி சிவகார்த்திகேயன் தான் என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் ராஜ்கமலுடன் சிவகார்த்திகேயனுக்கு ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டதால் அவர் மூலம் கமலை இந்தப் படத்தில் உள் இழுக்கலாம் என கருதுகின்றனர். சரி அப்போ கமல் மாவீரன் படத்தில் நடிக்க போகிறாரா? என்றால் அதுதான் இல்லை.
படத்தின் கதைப்படி சிவகார்த்திகேயனின் உள் உணர்வாக கமல் இருக்க போகிறாராம். அதாவது திடீரென சிவகார்த்தியனுக்கு ஒரு மைண்ட் வாய்ஸ் கேட்குமாம். அது என்ன சொல்கிறதோ அதன் படி சிவகார்த்திகேயன் நடப்பாராம். இதுதான் அந்தப் படத்தில்
வரும் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரமாம்.
இதையும் படிங்க : ஒரு வழியா அந்த பிரம்மாண்ட சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகப்போகுது… எப்போன்னு தெரியுமா?
அந்த மைண்ட் வாய்ஸுக்கு சொந்தக் குரலாக பிரசித்தி பெற்ற குரலாக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என கருதி கமல் குரலே இருந்தால் இன்னும் பிரம்மாதமாக இருக்கும் என கமலிடம் கேட்டிருக்கின்றனர். ஏற்கெனவே கமல் இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக தென் ஆப்பிரிக்காவில் இருப்பதால் வந்ததும் பேசிக் கொள்ளலாம் என கூறியிருக்கின்றாராம்.