நானும் கமலும் நண்பர்களா...? ச்சே ச்சே இல்லவே இல்ல...பெரிய குண்டை தூக்கிப் போட்ட பிரபல நடிகர்...!
தமிழ் சினிமாவில் விக்ரம் படத்தின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் கமல். இந்திய சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் இப்படி ஒரு படம் வந்ததில் லோகேஷுக்கு அப்புறம் முக்கிய பங்காற்றியவர் கமல்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் கமல் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படம் பண்ணுவதிலும் மும்முரமாக இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் மாதவன் கமல் பற்றி சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்தார். அவரின் ராக்கெட்டரி படம்
திரைக்கு வர காத்திருக்கிறது.சமீபத்தில் தான் படத்தின் டிரெய்லர் வெளியானது. இஸ்ரோவில் பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது.
கமலும் மாதவனும் நல்ல நண்பர்கள் என நிரூபர் பேச்சை ஆரம்பிக்கும் போது ஐய்யோ கமலை நண்பன் என சொல்வது பெரிய தப்பு. அவர் எவ்ளோ ஒரு பெரிய ஜீனியஸ். அவரை பின்பற்றி வந்தவர்கள் தான் நாங்கள். அவருடைய ரசிகன் என்று தான் சொல்லவேண்டும். நண்பன் என கூறக்கூடாது என வாயில் அடித்துக் கொண்டார். மாதவனும் கமலும் மூன்று படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.