டான்ஸ் கைவந்த கலை! அப்புறம் ஏன் பாட்டுனதும் ஓடிட்டாரு? கமல் நடிக்க மாட்டேனு சொன்ன படம் எதுனு தெரியுமா

by Rohini |
kamal
X

Actor Kamal: எந்த கதாபாத்திரமானாலும் ஏற்று நடிக்கக் கூடிய திறமைசாலியான நடிகர். விதவிதமான கெட்டப்களில் நடித்து உண்மையிலேயே உலகநாயகன் என்ற பெயருக்கு பொருத்தமான நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன்.

நடன இயக்குனராக ஆரம்பகாலங்களில் பணிபுரிந்திருக்கிறார். அதற்கு முன் குரூப் டான்சராகவும் இருந்திருக்கிறார். பரத நாட்டியத்தை திறம்பட ஆடுவதில் வல்லவர். இப்படி பல திறமைகளை உள்ளடக்கிய கமல் ஒரு படத்தில் நான்கு பாடல்களா என தெரிந்ததும் அந்த படத்தில் இருந்தே விலகியிருக்கிறார்.

இதையும் படிங்க: போனிலேயே பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாட்டு அதுதான்!..

குடிசை என்ற படத்தை இயக்கியவர் ஜெயபாரதி. அவர் ‘இரண்டு பேர் வானத்தை பார்க்கிறார்’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தார். அந்த கதையை படமாக எடுக்க வேண்டும். அதற்காக ஒரு தயாரிப்பாளர் வேண்டுமே என தேடிக் கொண்டிருந்தார் ஜெயபாரதி.

அந்த காலத்தில் ஒரு போட்டோ ஸ்டிடூயோ வைத்திருந்த எம்.ஆர். ரமேஷ் என்பவர் இவர் கதையால் ஈர்க்கப்பட்டு நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என முன்வந்தார். கூடவே இந்தக் கதையில் கமல் நடித்தால்தான் நன்றாக இருக்கும். கமல் நடித்தால்தான் என்னை போன்று முதலீடு போட்டவர்களால் அதை எடுக்க முடியும் என்றாராம்.

இதையும் படிங்க: அஜித்தை புறக்கணிப்போம்! பிரபலம் சொன்னத்துக்கு சரியான பதிலடி கொடுத்த சித்ரா லட்சுமணன்

இந்த கதையை கமலிடம் சொல்ல கமலும் அந்தக் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அதற்கு முக்கியக்காரணம் அந்தக் கதையில் திரைக்கதையை சிறப்பாக அமைத்திருந்தாராம் ஜெயபாரதி. உடனே கமலுக்கு 500 ரூபாயை அட்வான்ஸாகவும் கொடுத்தாராம் தயாரிப்பாளர் ரமேஷ்.

இந்த நிலையில்தான் படத்தில் நான்கு பாடல்களை அமைக்க வேண்டும் என தயாரிப்பாளர் ரமேஷ் சொல்ல அதற்கான வரிகளை கண்ணதாசன் எழுதி முடிக்க கவிதா ஹோட்டலில் பாடல் பதிவு அனைத்தும் முடிந்துவிட்டதாம். இந்த செய்தி கமல் காதுக்கு போக உடனே ஜெயபாரதியை அழைத்து ‘இதற்கு முன் நான் நடித்த படங்களில் நடனம் ஆடியும் பாடியும் தான் நடிக்கிறேன். இந்தப் படத்திலாவது கொஞ்சம் வித்தியாசமாகவே பண்ணலாமேனு நினைத்தேன். ஆனால் இதிலும் நான்கு பாடல்களை வைத்துவிட்டீர்கள்’ என கூறி படத்தில் இருந்து விலகி விட்டாராம் கமல்.

இதையும் படிங்க: சிவாஜியின் ரியல் பாசமலர் ஸ்டோரி தெரியுமா?!.. பாடகியிடம் அன்பு காட்டிய நடிகர் திலகம்!..

Next Story