கமல் அந்த விஷயத்துல ரொம்ப நேர்மையானவரு... இயக்குனர் சொல்லும் 'அபூர்வ' தகவல்

by sankaran v |   ( Updated:2024-06-18 02:10:28  )
Kamal
X

Kamal

உலகநாயகன் கமல் குறித்தும் அவரது சினிமா மீதுள்ள தணியாத தாகம் குறித்தும் இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி ஒன்றில் இப்படி தெரிவித்துள்ளர்.

அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதையே முதலில் வேறு. அந்தப் படத்தில் ஜனகராஜ் தான் கமலுக்கு சித்தப்பாவாம். ஆர்.எஸ்.சிவாஜி அவரது நண்பராம். முதலில் 13 நாள் வீனஸ் ஸ்டூடியோவில் தான் செட் போட்டு எடுத்தார்களாம். அப்போது கமல் சொல்லச் சொல்ல ராசி அழகப்பன் தான் எழுதுவாராம்.

AS

AS

ஒரு பாட்டு, ஒரு லவ் சீன், ஒரு பைட்டு எடுத்தாங்களாம். முதல் 13 நாள்கள் எடுத்து விட்டு போட்டுப் பார்த்தாங்களாம். திருப்தி இல்லையாம். இளையராஜாவிடம் போய் கமல் 'மெக்கானிக் ஷெட்ல வச்சிப் பாட்டு ஒண்ணு ரெடி பண்ணனும்'னு சொன்னாராம். வாலி பாடல் எழுதினாராம்.

ஆனால் அவர் எழுதியது வேறு. சென்னை சேரி பாஷையை மையமாக வைத்துப் பாடல் எழுத அது முதலில் எல்லாருக்கும் பிடித்தது மாதிரி இருந்தாலும் எல்லாம் எடுத்து முடித்துப் போட்டுப் பார்க்கும்போது ஒரு குறை இருந்ததாம்.

அதன்பிறகு அதற்கு என்ன செய்வது என்று யோசித்து எடுத்த வரை படத்தை எல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு புதிதாக கதை எழுத, பாடல்கள் எழுத சூட்டிங் எடுத்தார்களாம். அப்படி உருவானது தான் ராஜா கைய வச்சா பாடல்.

இந்தப் பாடலுக்கு முதலில் அப்பு கமலின் கேரக்டருக்காக பழைய பஸ்ஸை கேரவன் போல கமல் மாற்றி இருந்தார் காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனை ஏமாற்றக்கூடாது என்பதில் கமல் பிடிவாதமாக இருந்தாராம். அதனால் தான் தனது தொழில்ல எப்பவும் கமல் நேர்மையாக இருப்பாராம்.

இதையும் படிங்க... என்னதான் லேடி சூப்பர்ஸ்டாரா இருந்தாலும் அந்த விஷயத்துல கோட்ட விட்ட நயன்! கெத்து காட்டிய நடிகை

அதனால் தன்னோட பணம் நஷ்டமானாலும் பரவாயில்லை. காசு கொடுத்து படம் பார்க்க வருபவனுக்கு அது திருப்தியா இருக்கணும்னு நினைப்பாராம் கமல்.

மேற்கண்ட தகவலை இயக்குனர் ராசி அழகப்பன் தெரிவித்துள்ளார்.

Next Story