ஆட்டத்தில் சிக்குவாரா கமல்...? மெல்லமாக காய் நகர்த்தும் ராஜமௌலி....!

by Rohini |
kamal_main_cine
X

தெலுங்கு சினிமாவின் மாபெரும் இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபாலி பாகம் 1 மற்றும் 2 படங்கள் சற்றும் விறு விறுப்புக்கு பஞ்சமில்லாமல் பெரும் சாதனகளை படைத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆனது. சுமார் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து உலக அரங்கில் பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த பெருமைக்கெல்லாம் சொந்தக்காரர் ராஜமௌலி.

kamal1_cine

இந்த ஒரு படத்தின் மூலம் உலக சினிமாவையே தென்னிந்திய சினிமா பக்கம் பார்க்க வைத்த பெருமை ராஜமௌலியை சேரும். இந்த படத்தை தொடர்ந்து இரு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை பின்னனியாக வைத்து, 'RRR' என்கிற மற்றுமொரு பிரமாண்ட படத்தை இயக்கினார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்தனர். மேலும் சமுத்திரக்கனி, ஸ்ரேயா, ஆலியா பட் மற்றும் அஜய் தேவ் கான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

kamal2_cine

இந்த படமும் இந்திய சினிமா அளவில் பெருமளவு பேசப்பட்டது. 5 மொழிகளில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பையும் வசூல் சாதனையையும் பெற்றது. இவரின் இந்த சாதனை இதோடு நிற்காமல் அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து பெரிய பட்ஜெட் படமொன்றை இயக்க இருக்கிறார். இதை அறிந்த தெலுங்கு ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். நிச்சயம் ராஜமௌலி எடுக்கும் இந்த படமும் அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகும்.

kamal3_cine

இந்த நிலையில் பாகுபாலியில் கட்டப்பா கதாபாத்திரம் எந்த அளவுக்கு மெருகேற்றியதோ அதே போல இந்த படத்திலும் அதே மாதிரியான கதாபாத்திரம் இருக்கிறதாம். அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசனை வைத்து எடுக்கலாமா என பேசி வருகின்றனராம். ஆனால் நம்ம ஆண்டவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை. ஏற்கெனவே கைவசம் படங்களை வைத்து சுற்றிக் கொண்டிருக்கும் கமல் எப்படி சம்மதிப்பார்? என்ற கோணத்திலும் யோசித்து வருகின்றனராம்.

Next Story