2 ஆயிரம் கோடி போச்சி!.. சிவகார்த்திகேயனால் நடு ஆற்றில் விடப்பட்ட கமல்.. முக்கிய டீல் புட்டுகிச்சே...

by sankaran v |   ( Updated:2023-11-24 14:07:18  )
Kamal, SK
X

Kamal, SK

விக்ரம் சூப்பர் ஹிட்டுக்கு பின் கமல் மீண்டும் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பிஸியாகி விட்டார். ஒருபக்கம் மணிரத்தினத்துடன் ஒருபடம், வினோத்துடன் ஒரு படம் என நடிக்க துவங்கிவிட்டார். இதில், மணிரத்தினம் படத்துகு தக் லைப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் சிம்புவை வைத்து ஒரு படம், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் என தயாரிப்பிலும் இறங்கிவிட்டார். இதில், சிம்பு படம் இன்னும் துவங்கவே இல்லை. சிவகார்த்திகேயன் படம் துவங்கி அதன்பின் நின்றது. இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

இந்தப் படத்தை இயக்குபவர் தேசிங்கு பெரியசாமி. இந்த நிறுவனம் சோனி லியு நிறுவனத்தோட தான் இணைந்து பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவர்கள் கிட்டத்தட்ட கமலை நம்பி 2000 கோடி ரூபாய் வரை இறக்குவதாகக் கூட சொன்னாங்க.

SK, Kamal

SK, Kamal

இப்ப இந்த மேட்டர் முதல் பிராஜெக்ட்லயே புட்டுக்கிச்சு. ஏன்னா போட்ட பட்ஜெட்ட விட எகிறிடுச்சு. எப்பவுமே கார்ப்பரேட் நிறுவனத்தைப் பொறுத்தவரை பேப்பர்ல எழுதுனதுதான்.

அவங்ககிட்ட கருணை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதுதான் நிலைமை. இப்ப என்னடான்னா இவங்க பட்ஜெட்டை அதிகமாக்கிட்டாங்க. அதனால கமல் தரப்பு அவங்கக்கிட்ட போய் இதுபற்றி கேட்க பிரச்சனை ஆனது. அதனால சோனி லியு நிறுவனமும், ராஜ் கமல் நிறுவனமும் முதலும் கடைசியுமாகப் பண்ற படம் இதுதானாம். அந்த 2000 கோடியும் இனி கமலை நம்பி போடப்போறதில்ல. இனி வேற ஏதாவது ஒரு கம்பெனியை நம்பி போடுவாங்களாம்.

இப்படி விக்ரம் ஹிட்டுக்கு பின் கமல் தயாரிப்பில் இறங்கிய இரண்டு படங்களுமே சிக்கலை சந்தித்திருக்கிறது. சிம்பு படம் எப்போது துவங்கும் என்பதும் தெரியவில்லை.

Next Story