ஆண்டவரே இப்படி பண்ணலாமா?.. நம்புனவங்களுக்கு சரியான ஆப்பு வைத்த கமல்!..
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரின் அர்ப்பணிப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு பொக்கிஷம் போலதான். நடிப்பின் மீதும் கலையின் மீதும் இவர் வைத்திருக்கும் அன்பு தான் இன்று வரை ஒரு உலக நாயகனாக நம்மிடையே நிற்க வைத்திருக்கின்றது.
கமல் தற்போது சங்கரின் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தை போலவே மிகப்பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்யும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
விக்ரம் படத்தின் வெற்றி தான் கமலை சினிமாவில் மீண்டும் ஆர்வத்துடன் நுழைக்க உதவியது.அதுவரை அரசியலில் ஆர்வம் காட்டி வந்த கமலை விக்ரமில் நடிக்க வைத்து மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்து அடுத்தடுத்த படங்களின் கமிட்டுகளால் பிஸியாக வைத்திருக்கிறார் லோகேஷ்.
கமலின் லைன் அப்பில் வரிசையாக படங்கள் இருந்தன. அவற்றில் விக்ரம் 2 , பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னத்தின் இயக்கத்தில் ஒரு படம், எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் என படுபிஸியாக தன்னுடைய கால்ஷீட்டை வைத்திருந்தார்.
இதில் புதிய திருப்பமாக இந்தியன் 2 படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறாராம். அடுத்ததாக் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறாராம். ஆனால் மகேஷ் நாராயணன் மற்றும் பா.ரஞ்சித் இவர்களை டீலில் விட்டுவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.
ஏற்கெனவே விக்ரம் ஆடியோ லாஞ்சில் பா.ரஞ்சித் கமலுடன் அடுத்தப் படம் பண்ணபோறேனு ஓப்பனாக கூறினார். ஆனால் இப்போது அவரை கைவிட்டு விட்டார் கமல் என்று கூறிவருகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால் தான் தெரியும்.
இதையும் படிங்க : விஜய் அரசியலுக்குள் வந்தால் நானும் வருவேன்- ஓப்பன் ஸ்டேட்மண்ட் விட்ட பிரபல காமெடி நடிகர்…