அந்தப் படத்துக்கு பிறகுதான் என்னுடைய ஒரிஜினாலிட்டியே போயிடுச்சு! கமல் கூறிய ரகசியம்
தமிழ் திரையுலகில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவைப் பற்றி அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருப்பவர். இவருக்குத் தெரியாத ஒன்று இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமாவையும் நடிப்பையும் தன் மூச்சாகக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து இன்று வரை இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்துகோளாக இருந்து வருகிறார்.
எந்த கதாபாத்திரம் ஆனாலும் அதை திறம்பட செய்து கொடுப்பவர் கமல் .மேலும் படத்திற்கு தேவையான எதுவாக இருந்தாலும் அதற்காக மிகவும் மெனக்கிடுபவராக இருந்து வருகிறார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வரும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் எடுத்துக்காட்டாக சிவாஜியின் படத்தை போல கமலின் படத்தையும் உதாரணமாக சொல்லுவார்கள்.
சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஒரு அசுரனாக இருக்கிறார் கமல். இந்த நிலையில் தன்னுடைய ஒரு அனுபவத்தை நடிகர் காதல் சுகமாரிடம் ஒரு சமயம் தெரிவித்து இருக்கிறார் கமல். விருமாண்டி படத்திற்காக ஒரு துணை நடிகராக வந்தவர் தான் காதல் சுகுமார். அதிலிருந்தே கமலுக்கும் காதல் சுகுமாருக்கும் ஒரு நட்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே காதல் சுகுமார் வடிவேலுவை இமிட்டேட் செய்து பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்தவர்.
அதைப் பற்றி கமல் சுகுமாரிடம் "இனிமேல் இந்த மாதிரி யாரையும் இமிடேட் செய்து நடிக்காதே. ஒருவர் இல்லை என்றால் அவரை நாம் இமிடேட் செய்யலாம். ஒருவர் இருக்கும்போதே அவரை இமிடேட் செய்து நடிக்க கூடாது .மேலும் அது உன்னுடைய ஒரிஜினாலிட்டியை கெடுத்து விடும் என்று கூறினாராம். அதுமட்டுமில்லாமல் ஒருவரின் குரலை மிமிக்கிரி செய்து அதன் மூலம் உன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ளவும் கூடாது .உனக்கு என்று ஒரு தனித்திறமை இருக்கும். அதை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கூறி தான் நடித்த சலங்கை ஒலி படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தையும் சுகுமாரிடம் கூறினாராம்.
அந்தப் படத்தில் கமல் முழுவதும் பரதநாட்டிய கலைஞராகவே நடித்திருப்பார். அதனால் பெண்ணின் சில தன்மைகள் அவருக்குள் இருந்து கொண்டே இருந்ததாம். அதனால் சில நாட்கள் அவருடைய ஒரிஜினாலிட்டியே இல்லாமல் போய்விட்டதாம். அதனால் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை திரும்பக் கொண்டு வருவதற்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளை கற்றுக் கொண்டாராம் கமல். இதை சுகுமார் ஒரு பேட்டியின் மூலம் கூறினார்.
இதையும் படிங்க : விஜய்யை பின்னால் இருந்து இயக்குவது இந்த தேசிய கட்சிதான்- பகீர் கிளப்பும் பத்திரிக்கையாளர்…