
Cinema News
இந்தியன் – 2 படத்தின் மேக் அப் டெஸ்டில் கமல் செய்த வேலை…! அசந்து போன டெக்னீஷியன்ஸ்…!
ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட திரைப்படம் இந்தியன் 2. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 விழுக்காடு நிறைவடைந்த நிலையில் சில பல பிரச்சினைகளால் படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையில் நடிகர் கமல் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்று விட்டார். இந்தியன் 2 திரைப்படத்தை தயாரிக்க உள்ள லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பணம் கொடுத்து உதவ உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்தியன் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி ஏகாதிபத்திய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளதால் படத்தை ஆரம்பிக்க திவிரம் காட்டி வருகின்றனர். உதய நிதியும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் படம் ஆரம்பிக்கப் பட்ட நிலையில் ஒரு மேக்கப் டெஸ்ட் எடுத்து விடலாம் என்று கமலை வைத்து எடுக்க திட்டமிட்டுள்ளார் சங்கர். தாத்தா போடுகிற உடை, அடையாளம் எல்லாம் போட்டுக் கொண்டு தயாராகி இருந்தனராம். உடனே கமல் தான் கொண்டு வந்த 3 வகையான பழங்காலத்து பேனாக்களை சங்கரிடம் கொடுத்து எது வேண்டுமோ பாருங்கள் என்று கூறினாராம். அதாவது தாத்தா வேடம் என்பதால் பேனாவை ஒரு விதத்தில் மறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் முன் கூட்டியே இவர் கொண்டு வந்துள்ளதை அறிந்து அனைவரும் எப்படி பட்ட ஒரு கலைஞனாக இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டோம் என்று கூறினார்.