Connect with us
banner

என்ன ஆண்டவரே இப்படி பண்ணிடீங்க.., இறந்து போன நடிகரின் செயலை காப்பியடித்த கமல்.!?

vikram_main_cine

Cinema News

என்ன ஆண்டவரே இப்படி பண்ணிடீங்க.., இறந்து போன நடிகரின் செயலை காப்பியடித்த கமல்.!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.  படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகிறது.

இந்த படத்தின் இன்னோர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக கமல்ஹாசன் , தனது ரசிகர்களை சந்தித்து வந்துள்ளார். அதாவது, கமல் ரசிகர்கள் அவரை பற்றி பெருமையாக பேசும் போது, கமல்ஹாசன் பின்னாடி இருந்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

கமல் ரசிகர்களுக்கு அந்த சமயம் என்ன சொல்வது என்றே தெரியாது. சந்தோஷத்தில் திக்குமுக்காடி செல்கின்றனர்.  சிலர் கமல்ஹாசனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் அழுது விட்டனர். சிலர் உங்களுக்கு பிடிக்காது இருந்தாலும் பரவாயில்லை என கூறி காலில் விழுந்து விடுவர்.

இதையும் படியுங்களேன் – கமல் படத்தில் வில்லனாக அஜித்.!? இது என்னய்யா புது உருட்டா இருக்கு.?

இந்த சம்பவத்தை எங்கோ பார்த்தது போல இருக்கிறது என்று யோசித்த நெட்டிசன்கள் சட்டென கண்டுபிடித்து விட்டனர். மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்கள் இதே போல தனது ரசிகர்களை எதிர்பாராவண்ணம் சந்தித்தார். அங்கும் இதே போன்ற செட்டப் தான் இருந்தது. பின்னாடியில் இருந்து புனீத் ராஜ்குமார் வந்து ரசிக்கர்களை திக்குமுக்காட வைத்தார்.

சினிமாவில் புதிது புதியதாக முயற்சி செய்து வரும் கமல் இந்த விஷயத்தை காப்பிடித்து விட்டாரே என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top