அஜித்தின் இந்த மாஸ் ஹிட் படம் முதலில் பண்ண இருந்தது கமல்ஹாசன் தான்... ஜஸ்ட்டில் மிஸ்ஸான செம படம்...
அஜித் நடித்து மாஸ் ஹிட்டான சிட்டிசன் படத்தில் முதலில் இருந்தது கமல்ஹாசன் தானாம். அவர் இந்த படத்தில் நடித்ததால் தான் சிட்டிசன் பண்ண முடியவில்லை என இயக்குனர் சரவண சுப்பையா தெரிவித்து இருக்கிறார்.
அஜித் குமார், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் மணிவண்ணனின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் சிட்டிசன். இப்படத்தினை சரவண சுப்பையா இயக்கி இருந்தார். எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் தேவா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றி இருப்பார்.
அத்திப்பட்டி என்னும் ஒரு சிறு மீனவக் கிராமத்தில் வாழ்ந்த 600 கிராமத்தவர்களும் அடையாளமே இல்லாதபடி போய் இருப்பார்கள். அவர்களை பல்லாண்டுகளுக்கு முன்னர் கூட்டுப் படுகொலை செய்ததற்கு சிட்டிசனாக வரும் பழி வாங்குவதே இப்படத்தின் கதையாக இருக்கும். வித்தியாசமான கதைக்களம் 9 விதமான வேடங்கள் என்பதால் படத்தின் இயக்குனர் சரவண சுப்பையா கமலிடம் தான் இந்த கதையை கூறி இருக்கிறார்.
ஆனால், ஹேராம் படத்தில் பிஸியாக நடித்து வந்த கமல் இப்படத்தில் நீள மூடி வைத்து நடித்து வருகிறேன். இப்படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருவதால் முடித்தவுடன் பண்ணலாம் எனக் கூறிவிட்டார். இயக்குனர் அவருக்காக காத்திருக்கிறார். 3 மாதங்களும் முடிந்து விட்டது. வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அமர்க்களம் படத்தினை முடித்த் அஜித் முகவரி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.
அவரிடம் சென்று கதை சொல்லினாராம் இயக்குனர். உடனே மொத்த ஸ்கிரிப்டையும் அஜித் கேட்டிருக்கிறார். ஆனால் தமிழில் இருந்ததால் அடுத்த 3 நாட்களில் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டு கொடுத்தாராம். இதை தொடர்ந்து சில நாட்களிலே அஜித் படத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாராம்.
அவரை காண சென்ற இயக்குனருக்கு ஒரு ப்ளூ ஹெல்மெட், பேஜருடன் 25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து வாழ்த்து சொன்னாராம். உங்களுக்கு பிடித்தவாரு படம் எடுங்கள். நீங்க கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுக்க சொல்லி இருக்கிறேன் எனக் கூறி இருக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் சரவண சுப்பையா தெரிவித்து இருக்கிறார்.