Cinema News
அந்த பாட்டால என் அரசியலே மாறியிருக்கும்…! தவறவிட்ட வருத்தத்தில் கமல்…! அதுவும் எம்.ஜி.ஆர் பாட்டுனா சும்மா..?
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் விக்ரம் படம் ஒரு பெரும் புரட்சியையே தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி விட்டது என்றே கூறலாம். அடுத்ததாக இவரின் தயாரிப்பில் ஏராளமான படங்கள் மற்றும் நடிப்பில் இந்தியன் – 2 படம் என ஏகப்பட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
விக்ரம் படம் வருவதற்கு முன் அரசியலில் ஆர்வம் காட்டி வந்த கமல் சில பல பிரச்சினைகளால் அவரால் அரசியலில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒரு நிலையான இடத்தை பெற முடியவில்லை. ஆனாலும் ஒரு புறம் விடாது தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கிறார்.
இதையும் படிங்கள் : ஜெமினிகணேசனிடம் தன் காதலை வெளிப்படுத்திய விதம்…! சாவித்திரியின் செயலை கண்டு வாயடைத்து நின்ற படக்குழு…
இந்த நிலையில் ஆரம்பகால சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சினிமாவில் நடித்து சாதித்த மனிதர்களில் முக்கிய இடத்தை வகிப்பவர் நம் எம்.ஜி.ஆர். பொது வாழ்வில் இவருக்கு இருக்கும் செல்வாக்கு இன்று வரை எந்த நடிகராலும் பெறமுடியவில்லை.அப்படி பட்ட எம்.ஜி.ஆர்ரின் அரசியல் சாந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் அந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் நடிகர் கமல்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் சக்கபோடு போட்ட நாளை நமதே படம் அது. அந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக வய்ப்பு வந்திருக்கிறது கமலுக்கு. ஆனால் அந்த நேரம் கமல் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகியிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லையாம். ஆனால் அதை நினைத்து இன்று வரை கமல் வருத்தப்படுவதுண்டு என்று சொல்கின்றனர். அதுவும் நாளை நமதே என்ற பாடலை நானும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து பாடியிருந்தால் இன்று உள்ள அரசியல் சூழலுக்கு அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கும் என கமல் கூறுவர் என இந்த பதிவை பகிர்ந்த சித்ராலட்சுமணன் தெரிவித்தார்.