என்னது....?! இந்தப் படம் கமல் நடிக்க வேண்டியதா? தூங்காம இரவு முழுவதும் வேலை செய்த நடிகர் இவர் தான்...!
நாளை நமதே படத்தில் கமல் நடிக்க வேண்டியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித் தான் ஆக வேண்டும். தொடர்ந்து படியுங்கள். புரியும்.
1975ல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான படம் நாளை நமதே. எம்ஜிஆர், லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, நம்பியார், நாகேஷ், எம்.ஜி.சக்கரபாணி, வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்து இருந்தார். நானொரு மேடைப்பாடகன், நீல நயனங்களில், என்னை விட்டால், நாளை நமதே காதல் என்து, என் இடையிலும் உள்பட பல பாடல்கள் உள்ளன.
இவற்றில் நாளை நமதே என்ற பாடல் படத்தில் 5 தடவை வரும். இந்தப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல் தான். அந்த சமயத்தில் தெலுங்கு, மலையாளம், தமிழ்னு பல படங்களில் பிசியாக இருந்தார். வெளிநாடுகளுக்கும் படப்பிடிப்பிற்காக சென்று இருந்தார்.
அதனால் இந்த வாய்ப்பை நழுவ விட்டார். பின்னர்; எம்ஜிஆருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின்னர் அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டதாக கமல் பல முறை மேடைகளிலும் கூட சொல்லியிருக்கிறார்.
கமல் இளவயதிலிருந்தே சினிமா மீது தணியாத தாகம் கொண்டவர். ஏதாவது படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபடுபவர். அவர் நடிக்கும் படங்களில் பல விஷயங்களில் ஈடுபாட்டுடன் வேலை செய்வார். உதவி இயக்குனராக கூட பல படங்களில் இருந்து வேலை செய்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு படம் தான் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான டிக் டிக் டிக்.
இந்தப்படத்தில் கமல் போட்டோகிராபராக வேலை செய்வார். 1981ல் வெளியான இந்தப்படம் த்ரில்லரான படமாக சக்கை போடு போட்டது. கமலுடன் மாதவி, ராதா, ஸ்வப்னா, தியாகராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இது ஒரு நிலாகாலம், நேற்று இந்த நேரம், பூ மலர்ந்திட ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
சித்ரா லட்சுமணன், மனோபாலா, ரங்கராஜ், மணிவண்ணன் என நால்வரும் உதவி இயக்குனர்களாக இருந்தனர். டிக் டிக் டிக் படத்தில் ஒரு தடவை விடிய விடிய படப்பிடிப்பு நடந்தது. அப்போது மனோபாலா, ரங்கராஜ், மணிவண்ணன் ஆகிய 3 பேரும் அலுப்பின் காரணமாக மாறி மாறி தூங்கி விட்டனர்.
அந்த நேரத்தில் கமல் தான் ஒவ்வொரு முறையும் கிளாப் அடித்தபடி நடித்து வந்தாராம். அப்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா நல்ல மூடுல இருந்ததால உதவி இயக்குனர்கள் யாரையும் திட்டவில்லையாம்.