கமல் மிகவும் பிடிவாதக்காரர்!.. அந்த விஷயத்தில ரஜினி சூப்பர்!.. கமலால் வேதனையடைந்த பிரபலத்தின் ஆதங்கம்!..

kamal
தமிழ் சினிமாவில் இன்று மாபெரும் உயரத்தை அடைந்திருக்கும் நடிகர்களில் மேலோங்கி இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவருடைய வளர்ச்சிக்கு கடின உழைப்பு ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும் விக்ரம் படத்தின் வெற்றி இவருக்கு ஒரு கம் பேக்காக இருந்தது.

kamal
அந்த வெற்றியின் மூலம் பல படங்களை தயாரிக்கவும் முன் வந்திருக்கிறார் கமல். களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்த தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கு ஒரு ஆசை இருந்திருக்கிறதாம். டான்சர் ஆக வேண்டும் என்பதே இவரின் எண்ணமாம்.
ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த கமல் பருவம் வந்ததும் அதற்கேற்றாற்போல கதைகள் எதுவும் வராத காரணத்தினால் விரக்தியில் ஒரு நடனப்பள்ளியில் சேர்ந்தாராம். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போது ஏராளமான படவாய்ப்புகள் தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருந்தது.

kamal
ஆனால் 18, 19 வயதை எட்டியதும் எந்த பட வாய்ப்புகளும் வராததால் கோபத்தில் சேர்ந்தாராம். மேலும் இனிமேல் நடிக்கவும் மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அப்பொழுது தான் பிரபல கதாசிரியர் கலைஞானம் அவரின் குறத்தி மகன் படத்திற்காக கமலை நடிக்க வைக்க அணுகியிருக்கிறார்.
இதையும் படிங்க : தனக்கு ஹிட் கொடுத்த இயக்குனர்களையே கழட்டிவிடும் நடிகர்கள்…யார் மேல தப்பு பாஸ்!…
ஆனால் திரையுலகத்தினர் மீது கடுங்கோபத்தில் இருந்த கமல் என்னால் நடிக்க முடியாது, நான் நடனம் தான் ஆடப்போகிறேன் என்று கூறினாராம். ஆனால் விடாமல் துரத்திய கலைஞானம் கமலிடம் கற்பகம் ஸ்டுடியோவிற்கு வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை வந்து பார்த்தால் போதும். உன்னை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அதற்காகவாவது வந்து பார்த்துவிட்டு போ என்று கூற அதன் பின்னரே கமல் அங்கு போயிருக்கிறார்.

gemini
ஆனால் கமல் கற்பகம் ஸ்டூடியோவை பார்த்ததும் ஏதோ ஒரு வித புது உணர்வு மனதிற்குள் எழ உடனே குறத்தி மகன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அதன் பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்த தகவலை கூறிய கலைஞானம் மேலும் ஒரு விஷயத்தை கூறினார். எப்படி ரஜினி என்னால் ஹீரோவாக அவதாரம் எடுத்தாரோ அதே மாதிரி தான் என்னுடைய பிடிவாதத்தால் தான் கமலும் சினிமாவிற்குள் மீண்டும் வந்தார்.
ஆனால் இன்று வரை அதை கமல் ஒரு தடவை கூட மேடையில் கூறியதில்லை. அவர் ஒரு பிடிவாதக்காரர். ஆனால் ரஜினி என்னை பற்றி பெருமையாக கூறுவார் என்று கலைஞானம் தெரிவித்தார்.

rajini