தமிழ் சினிமாவில் இரண்டு பாகமாக வந்த முதல் திரைப்படம்!..மனுஷன் எல்லாத்துலயும் முத்திரை குத்திருக்காருபா!..
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று விட்டால் அந்த படத்தின் உள் கருத்தை வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்து விடுகின்றனர். குறிப்பாக வந்த திரைப்படங்களில் சிங்கம், சாமி, பில்லா, காஞ்சனா,போன்ற படங்கள் எல்லாம் இதற்கு உதாரணங்களாகும்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் கூட அடுத்த பாகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. சந்திரமுகி படமும் இந்த லிஸ்டில் இருக்கும் படமாகும். இரண்டாம் பாகம் என்பது ஒன்று முதல் பாகத்தில் தொடர்ச்சியாக இருக்கும் அல்லது இரண்டும் பாகத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் கூட இருக்கும்.
அப்படி வந்த படங்களில் சார்லி சாப்ளின், கலகலப்பு ஆகிய படங்களை கூறலாம். இப்படி தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாக்களிலும் இரண்டாம் பாகம் என்பது ஒரு டிரெண்டாகி வருகின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முதன் முதலில் இரண்டு பாகங்களை கொண்ட படமாக வந்த முதல் திரைப்படம் கமல் நடித்த ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படம்.
சினிமாவின் என்சைக்ளோபீடியாக வலம் வரும் கமல் சினிமாவை பொறுத்த வரைக்கும் எல்லா தொழில் நுட்பத்திலும் இவர் தான் முதல் விதையாக இருப்பார். அந்த வகையில் இந்த இரண்டு பாகம் என்ற டிரெண்டிங்கை அறிமுகப்படுத்தியது கமல் தான். கல்யாணராமன் என்ற படத்தின் இரண்டாம் பாகம் தான் ஜப்பானில் கல்யாணராமன் என்ற திரைப்படம் ஆகும்.