பாதியில் நின்ற கமல் படம்...! ஜாதியை காரணம் காட்டி கைவிடப்பட்டதா..? இயக்குனர் கூறிய சுவாரஸ்யமான தகவல்..!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலக நாயகனாக வளர்ந்து நிற்பவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர்
பாலசந்தரால் அறிமுகபடுத்தப் பட்டவர். அதிலிருந்து பாலசந்தர் மேல் கமலுக்கு அளாவதியான பிரியம் உண்டு. பாலசந்தர் படங்களில் அதிகமாக நடித்துள்ளார் கமல்.
ஏகப்பட்ட படங்களை இயக்கிய பாலசந்தர் புரட்சி கவிஞர் ‘பாரதியாரை’ மையமாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடியதாம். இது 80களிலயே தோன்றிய முயற்சி. அப்போது வைரமுத்துவிடம் சொல்லியிருக்கிறார் பாலசந்தர். வைரமுத்துவிற்கு உதவியாளராக இருந்தவர் கவிஞரும், இயக்குனருமான ராசி அழகப்பன்.
மேலும் இந்த படத்தில் நடிக்க கமலுக்கு ஏகப்பட்ட ஆசையாம். ஆனால் படம் பாதியிலயே கைவிடப்பட்டதாம். காரணம் தெரிய அழகப்பனிடம் கேட்ட போது பாரதியார் ஒரு பிராமணர், நடிக்கும் நாயகன் கமலும் ஒரு பிராமணர், பாலசந்தரும் ஒரு பிராமணர். ஆகையால் பாலச்சந்தர், இவர்கள் எல்லாரும் சேர்ந்து பாரதியாருக்கு கச்ச கட்டுகிறார்களோ என்ற தொனி வந்திரும் என்று நினைத்தாரோ ? இல்லையோ?
தெரியவில்லை. அதனால் படம் பாதியிலயே கைவிடப்பட்டது என இயக்குனர் அழகப்பன் கூறினார். மேலும் பாரதியார் படத்தில் மட்டும் கமல் நடித்திருந்தால் அவருக்கு கிடைத்திருக்கக் கூடிய அங்கீகாரமே வேற மாதிரி இருந்திருக்கும் எனவும் கூறினார்.