என் கோவணத்தை உருவினா பரவாயில்லை... தயாரிப்பாளர் கோவணம் என்னாவது? பதறிய கமல்ஹாசன்!..
16 வயதினிலே படத்தின் நினைவலைகளை இந்தப் படத்திற்கான டிஜிட்டல் வெர்சன் ஆடியோ லாஞ்சில் உலகநாயகன் கமல் ஹாசன் இவ்வாறு சொல்கிறார்.
இந்தப் படம் வந்த புதிதில் தொழில்நுட்ப வசதி அந்த அளவு கிடையாது. ஏதாவது ஸ்லோ மோஷனில் காட்டணும்னு டைரக்டர் சொன்னபோது நானும் ஸ்ரீதேவியும் ஸ்லோமோஷனில் ஓடுவது போல நடித்தோம். ஏன்னா அப்போது டைரக்டரிடம் அதற்குரிய கருவிகள் இல்லை. அதே போல அவரது முதல் கதாநாயகன் இந்தப் படத்தில் யாருன்னு கேட்டா, அது தயாரிப்பாளர் தான்.
அவருக்கு எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை, தைரியம் என வியாபாரம் பேசத் துவங்கிய பின்பு தான் தெரிந்தது. இந்தப் படத்தை எதிர்பார்த்தவர்களை விட கிண்டல் அடித்தவர்கள் தான் அதிகம்.
ஒரு வியாபாரம் தெரிந்த பண்டிதரிடம் இந்தப் படத்தைப் பற்றிக் கேட்டபோது, அவர் சத்தியம் அடிக்காத குறையாக இந்தப் படம் அவுட்டுன்னு சொன்னார். அப்புறம் படம் பார்த்துவிட்டுப் போகும்போது அவுட்டுன்னாரு. என்னய்யா அவுட்டுன்னு சொல்றீங்கன்னு கேட்டபோது கோவணத்தை உருவிட்டான்னு சொன்னாரு.
அப்போ நம்ம கோவணம்னாலும் பரவாயில்லை. தயாரிப்பாளர் கோவணம் என்னாவதுன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். ஆனா அவருக்குத் தங்கக் கிரீடமே வச்சிட்டாங்க ரசிகர்கள். இதுதான் நடந்தது என்கிறார் கமல்.
இதையும் படிங்க... செல்போனிலேயே தாலி கட்டிய விஜய் ஆண்டனி!.. இது செம லவ் ஸ்டோரியா இருக்கே!…
1977ல் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிக்க பாரதிராஜா இயக்கத்தில் வெளியானது 16 வயதினிலே. படம் முழுக்க கோவணம் கட்டி நடித்திருப்பார் கமல். ஸ்ரீதேவி தான் ஜோடி. ரஜினிகாந்த் தான் வில்லன். கவுண்டமணி நகைச்சுவையில் லந்து கொடுப்பார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும். இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் கலைமணி.
காந்திமதியின் நடிப்பும் செமயாக இருக்கும். இந்தப் படத்தில் உதவி இயக்குனராக வரும் பாக்கியராஜூம் மருத்துவராக ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். முதலில் இந்தப் படத்தை எடுக்க தைரியம் வேண்டும். அதனால் தான் இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இந்தத் தயாரிப்பாளர் கொண்டாடப்படுகிறார். படமும் சக்கை போடு போட்டு வருகிறது.