கமலின் நாயகன் படம் சத்யராஜ் படமா...? புதுப் புரளியை கிளப்பும் திரைப்பிரபலம்...!
நடிகர் கமல் நடிப்பில் புது அத்தியாயத்தை ஏற்படுத்திய படமாக நாயகன் படம் அமைந்தது. தமிழ் சினிமாவை மட்டும் அல்லாமல் இந்திய சினிமாவையே மிரட்டிய படமாக நாயகன் விளங்கியது. இளையராஜா இசையில் நாயகன் படத்தின் பாடல்கள் செம் ஹிட் ஆனது.
இந்த படத்தை மணிரத்னம் இயக்க கமலுக்கு ஜோடியாக நடிகை சரண்யா பொன்வண்ணன் இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜனகராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடிய படமாக நாயகன் அமைந்தது.
இதையும் படிங்கள் : வெளிநாட்டில் செட்டில் ஆக இருந்த நம்ம தல..! ராதிகாவின் முயற்சியால் மீண்டு வந்த அஜித்…என்ன மேட்டர்னு தெரியுமா..?
இந்த நிலையில் நாயகன் படத்தை பற்றி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாதன் ஒரு புதிய தகவலை பகிர்ந்தார். நாயகன் படத்திற்கு முன் அந்த கதாபாத்திரத்தில் வேறொரு படத்திற்காக நடிகர் சத்யராஜை வைத்து தான் மணிரத்னம் படத்தை எடுத்தாராம்.
ஆனால் சிலபல காரணங்களால் அந்த படம் நின்னு போக வேலு நாயக்கர் என்ற பெயரில் இந்த படத்தை எடுத்தார் என பயில்வான் கூறினார். மேலும் இது ஒரு உண்மை சம்பவமாக இருந்ததால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய படமாக இருந்தது.