இந்தியன் - 2க்கு பிரேக் எடுத்த கமல்....! எங்க போயிருக்காருனு தெரியுமா...?

by Rohini |
kamal_main_cine
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் உட்பட பலரும் நடித்திருந்த படம் விக்ரம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கு மாபெரும் ப்ளாக் பஸ்டர் படமாக வெற்றி பெற்றது. கமலே எதிர்பாராத அளவிற்கு படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது.

kamal1_cine

படத்தின் வெற்றியை ஒட்டு மொத்த தமிழ் சினிமாவுமே சேர்ந்து கொண்டாடியது. இந்த நிலையில் கமலை தேடி பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. கிடப்பில் போடப்பட்ட இந்தியன் - 2 படமும் தூசி தட்டி புத்துயிர் பெற்றது. நீண்ட நாள்களாகவே இழுபறியில் இருந்த இந்தியன் - 2 படம் மறுபடியும் மறு ஜென்மம் அடைந்திருக்கிறது.

kamal2_cine

ஏற்கெனவே இயக்குனர் சங்கர் ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒர் படம் பண்ணுவதாக இருந்த நிலையில் ஆந்திராவின் ஸ்ட்ரைக் காரணமாக சங்கர் இந்தியன் - 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக தெரிந்தது. ஆனால் நம்ம ஆண்டவரோ கொஞ்சம் பிரேக் எடுத்து வருகிறேன் என கூறி அமெரிக்கா சென்றிருக்கிறாராம்.

kamal3_cine

அமெரிக்கா செல்ல திடீர் அவசியம் என்ன என விசாரித்ததில் இன்னும் சினிமாவை பற்றி தெரிந்து கொள்வதற்காக இரண்டு மாத கால இடைவெளியில் அதை பற்றி படிக்க சென்றிருக்கிறாராம். ஏற்கெனவே புது புது டெக்னாலஜியை சினிமாவில் புகுத்தவல்லவர் கமலஹாசன். இன்னும் எந்த தொழில் நுட்பத்தை கொண்டு வர காத்துக் கொண்டிருக்கிறாரோ ? தெரியவில்லை என புலம்பி வருகின்றனர் திரையுலகை சார்ந்தவர்கள்.

Next Story