கமலை வைத்து இயக்கும் அடுத்த இயக்குனர் இவர்தான்...லோகேஷ் வெளியிட்ட அதிரடியான அப்டேட்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கும் படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
மேலும் படத்தின் இசை, டிரெய்லர் எல்லாம் வெளிவந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் சிங்கிளான பத்தல பத்தல பாடல் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக கமலும் லோகேஷும் பத்திரிக்கையாளர்கள், ரசிகர்களை சந்தித்த வண்ணம் இருக்கிறார்கள். போகும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருப்பதாக கமல் தெரிவித்தார். 4 வருடங்கள் கழித்து கமலை திரையில் பார்க்க ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் ஒரு புரோமோஷனில் லோகேஷ் கூறும்போது கமல் படத்தை பார்த்து ‘அடிப்பொலி’ என்று கூறியது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது என்றும் அவரின் அடுத்த படத்தை மலையாள இயக்குனரும் எடிட்டருமான மகேஷ் நாராயணன் தான் இயக்க போகிறார் என்றும் லோகேஷ் தெரிவித்தார். மகேஷ் நாராயணன் மலையாள சினிமாவில் தான் தன்னுடைய அதிக பங்களிப்பை அளித்துள்ளார். மேலும் விஸ்வரூபம் -2 படத்தின் எடிட்டர் இவர்தான். இவர் தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் பற்றி இன்னும் அதிகார பூர்வமாக வெளிவரவில்லை.