கமல் கூட நடிக்கவே மாட்டேன்.... படத்தை பிடிக்கலனு சொல்லிட்டாங்க.. ஃபீலிங்ஸ் காட்டும் கௌதம் மேனன்..

by Rohini |   ( Updated:2023-05-06 03:11:09  )
kamal
X

kamal

லோகேஷ் எப்படி கமலுக்கு ஒரு பெரிய தீவிர ரசிகரோ அதை போல கௌதம் வாசுதேவ் மேனனும் கமலின் தீவிரமான ரசிகர் ஆவார். இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு கமலை வைத்து எப்படியாவது ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும்.

அந்த ஆசை கமலின் தீவிர ரசிகராக இருந்த கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இருந்தது. அப்போதுதான் வேட்டையாடு விளையாடு படத்தின் கதையை கமலிடம் சொன்னாராம் கௌதம். ஆனால் அந்தப் படத்தின் கதை விவாதத்திற்கு முன்பாகவே கமல் கௌதமிடம் தசாவதாரம் பட கதையைச் சொல்லி எடுக்கலாமா என கேட்டாராம்.

ஆனால் டபுள் ஆக்டிங் ரோலை எடுக்க தயங்கும் கௌதம் பத்து கதாபாத்திரங்களை வைத்து எப்படி எடுப்பேன் என்ற தயக்கத்தில் முடியாது என சொல்லிவிட அதன் பிறகு தான் வேட்டையாடு விளையாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. மற்ற படங்களை விட கமல் இந்தப் படத்தில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் இயக்குனரின் போக்கிற்கே விட்டு நடித்த படமாக அமைந்தது.

ஒரு சில படங்களில் கதையில் குறுக்கீடுவார். இல்லை எனில் வசனத்தில் குறுக்கீடுவார். ஆனால் இந்த படத்தில் தான் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் இயக்குனரின் விருப்பத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். அப்போது கூட கமல் ஒரு சில பேரிடம் கௌதம் வாசுதேவ் மேனனை பற்றி "இவர் என்ன அந்தப் பக்கம் இந்த பக்கம் நடக்க சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஏதோ ஒரு மாதிரி போகிறது "என்று தனது ஆதங்கத்தை சொன்னாராம்.

ஆனால் படத்தை தன் குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்த கமல் கௌதம் மேனனிடம் "it worths for me" என்று கூறினாராம். ஆனால் இதே படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டபோது அதில் டப்பிங் பேசியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்தானாம் .அவர் அங்கு அந்த படத்தை பார்த்து கமலிடம் "இந்த படம் நன்றாகவே இல்லை "என கூறினாராம். ஆனால் கமல் தமிழில் பார்த்து மிகவும் கௌதம் மேனனை பாராட்டினாராம்.

அதுமட்டுமில்லாமல் கமலுடன் கண்டிப்பாக ஸ்க்ரீன் ஸ்பேஸ் பண்ணவே மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார் கௌதம் மேனன். ஏனெனில் கமல் ஒரு சிறந்த நடிகர் என்றும் அவருடன் சேர்ந்து தன்னால் நடிக்க முடியாது என்றும் அது ஒரு பயம் கலந்த மரியாதை என்றும் கௌதம் மேனன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : கௌதம் மேனனிடம் கதை சொன்ன கமல்!.. முடியாது என சொல்லி மறுத்த சம்பவம்.. என்ன படம் தெரியுமா?..

Next Story