அந்த மொழியில நடிச்ச ஒரே தமிழ் சினிமா நடிகர்... அதிலும் அடிச்சி தூள் கிளப்பிய உலகநாயகன்
கமல் நடித்த ஒரே வங்காளப் படம் கபிதா. 1977ல் வெளியானது. அவள் ஒரு தொடர்கதை படத்தோட கதை தான் இது. கே.பாலசந்தரின் இந்தப்படம் மெகா ஹிட்டானது. சுஜாதா கதாநாயகியாக அறிமுகமான படமும் இதுதான். அவருக்கு முதல் படமே செம மாஸ்.
அந்தப் படத்தை வீனஸ் கம்பைன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. அதை பரத் சம்ஷர் என்ற வங்காள இளைஞர் இயக்கினார். கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற அருமையான பாடல் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளது.
எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் மிமிக்ரியுடன் எஸ்.பி.பி. பாடி அசத்தியிருப்பார். கமலும் அதற்கேற்ப அற்புதமாக நடித்து இருப்பார். கேரளாவில் உள்ள வட்டம் சதன் என்பவர் தான் இந்த மிமிக்ரியைக் கொடுத்தாராம்.
இந்தப்படத்தில் கோபாலாக வந்து பரிதாபங்களை அள்ளிவிடுவார் கமல். அதே கதாபாத்திரத்தைத் தான் வங்காளத்திலும் நடித்திருப்பார். அங்கு கோபால மேனன் கதாபாத்திரம். இங்கு சுஜாதா நடித்த கவிதா கதாபாத்திரம் அங்கு கபிதாவானது. அந்த கதாபாத்திரத்தில் மாலாசின்ஹா நடித்து அத்தினார். அந்தப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. காரணம் கதை தான். கபிதாவுக்கு இசை அமைத்தவர் சலில் சௌத்ரி.
அழியாத கோலங்கள் படத்தில் இந்த பெங்கால் இசை அமைப்பாளர் தான் இசை அமைத்துள்ளார். செம்மீன் படத்திலும் இவரது இசை தான். கடவுள் அமைத்து வைத்த மேடை பாடலை அங்கு சுனோ சுனோ என்று வரும். இந்தப் பாடலை எழுதியவரும் சலில் சௌத்ரி தான். அங்கு இந்தப் பாடல் மிகுந்த வரவேற்புக்குள்ளானது. செம்மீன் பட பாடலுக்குப் போட்ட டியூனை இந்தப் பாடலுக்கு போட்டுள்ளார். மிமிக்ரி கொஞ்சம் அங்குள்ளதற்கு ஏற்ப மாற்றியிருக்காங்க. கிஷோர் குமார் பாடினார்.
இந்தப் பாடல்ல வெளியில் அனைவரையும் மிமிக்ரி பண்ணி சிரிக்க வைத்தாலும் கூட அவருக்குள் இருக்கும் சோகம் அவருக்கு மட்டும் தான் தெரியும் என்ற சூழலுக்கு ஏற்ப கமல் அற்புதமாக நடித்திருப்பார்.
குடும்பத்தைக் காப்பாத்துறதுக்காக அந்தக் குடும்பத்தின் மூத்த பொண்ணு தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் கதை. தமிழில் எவ்வளவு வரவேற்பு கிடைத்ததோ அதே போல வங்காள மொழியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அங்குள்ள மக்களின் உள்ளங்களில் கமல் நீங்கா இடம் பிடித்தார்.