விஜய்கிட்ட முதல்ல சொன்னதே நான்தான்! பகிரங்கமாக கூட்டணி பற்றி கூறிய கமல்

Published on: February 21, 2024
kamal
---Advertisement---

Vijay Kamal: நடிகர்கள் பல பேர் இப்போது பொதுவாழ்வில் நுழைய அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதுவும் விஜயின் அரசியல் வேகம் சூடுபிடித்ததும் மன்சூர் அலிகான் தன் கட்சியை பலப்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இன்னொரு பக்கம் விஷாலும் மறைமுகமாக அரசியல் குறித்து அறிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார். ஏற்கனவே அரசியலுக்கு வருவேன் வருவேன் என கூறிய ரஜினி அப்படியே நழுவி விட்ட நிலையில் திடகாத்திரமாக அதை அப்படியே இழுத்து பிடித்திருக்கிறார் நடிகர் கமல்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் எடுக்க நினைத்த ‘இணைந்த கைகள்’!… பல வகைகளிலும் வந்த தடை!.. நடந்தது இதுதான்!..

தன் கட்சி தொண்டர்களை அவ்வப்போது சந்தித்து பேசும் கமல் எப்படியாவது விட்டதை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரடியாக இந்த தேர்தலில் களமிறங்க உள்ளார். இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய கமலிடம் விஜய் அரசியல் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அதாவது தம்பி விஜய் சினிமாவிற்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியல் செய்ய போவதாக கூறியிருக்கிறாரே? அதை பற்றி உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வியை நிருபர்கள் கமலிடம் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த கமல் ‘அவர் செய்யும் செயல் வேறு. நான் செய்யும் செயல் வேறு. சினேகன் ஒரு மாதிரி பாட்டு எழுதுவார். நான் ஒரு மாதிரி பாட்டு எழுதுவேன். வைரமுத்து ஒரு மாதிரி பாட்டு எழுதுவார். அதனால் இதுவும் அவருடைய இஷ்டம்’ என கூறினார்.

இதையும் படிங்க: உங்களாலதான் லால்சலாம் படம் ஓடல!.. பழியை தூக்கிய யார் மேல போட்டிருக்காங்க பாருங்க ஐஸ்வர்யா!..

விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல் ‘ அரசியலுக்கு வரவேண்டும் என முதன் முதலில் விஜய்க்கு வரவேற்பு கொடுத்ததே நான்தான். அதுவும் இதே அலுவலகத்தில் வைத்துதான் பேசினோம்’ என சூசகமாக நழுவி விட்டார் கமல்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.