கமல் இந்த விஷயத்துல ரொம்ப கோவப்படுவார்...! ஆண்டவரின் ரகசியத்தை போட்டுடைத்த ஊர்வசி...
உலகநாயகன், ஆண்டவர் என அனைவராலும் அன்பால் அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு உன்னதமான நடிகர். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக ரொம்பவும் மெனக்கிடக்கூடிய மனிதர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் உலகளவில் வசூல் சாதனையை பெற்று ஓடிக்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கமலை பற்றிய ஒரு விஷயத்தை நடிகை ஊர்வசி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே கமலும் ஊர்வசியும் மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்.
இதன் மூலம் அவரின் ஒரு ரகசியத்தை உடைத்துள்ளார் ஊர்வசி.கமலுக்கு ஒரு விஷயத்துல ரொம்பவும் கோவப்படுவார் என கூறியுள்ளார். அதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் போது அந்த வேலையில் ஆர்வமில்லாமல் இருந்தால் அதற்காக மிகவும் கோவப்படுவாராம்.
அப்புறம் பார்த்துக்கலாம், டேக்-ல பாத்துக்கலாம் என கூறினால் ரொம்பவும் கோவப்படுவாராம். ஒரு இடத்தில் இருந்து குதிக்க சொன்னால் ரிகர்ஸல் 10 தடவை வந்தாலும் 10 தடவையும் மேல் இருந்து குதிப்பாராம். இப்படி இருக்கையில் ஆர்வமில்லாமல் ஒரு விஷயத்தை செய்யவிடமாட்டாராம்.