விக்ரமை டோட்டலா காலி செஞ்ச கமல்...! விரட்டி விட்டு கெத்தா நின்ன ஆண்டவர்...

by Rohini |
vikram_main_cine
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘விக்ரம்’. இந்த படத்தில் அனிருத் இசையமைத்திருக்கிறார். கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறாராம். சுமார் 4 வருடங்கள் கழித்து கமலின் படம் வெளியாவதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

vikram1_cine

படம் திரையரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் முதல் சிங்கிள் ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் கமலின் ஆட்டம் ஆச்சரியப்பட வைத்தது. நீண்ட நாள்களுக்கு பிறகு கமலை இப்படி பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

vikram2_cine

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து இணையம் முழுக்க கமலின் விக்ரமை படத்தை பார்த்து பார்த்து ரசிகர்கள் பிரமிப்பில் இருக்கின்றனர். அதே வேளையில் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் அவரது புகைப்படத்தை பார்க்க தேடினால் இணையப் பக்கம் முழுவதும் நம்ம ஆண்டவர் தான் நிரம்பி வழிகிறார்.

vikram3_cine

அந்த அளவுக்கு நடிகர் விக்ரமை ஒரே ஒரு டிரெய்லர் வைத்து காலி பண்ணிவிட்டார் கமல். எங்க பாத்தாலும் கமல் விக்ரம் போஸ்ட் தான் நிரம்பி இருக்கிறது. அவருடைய படம் இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என யாரும் நினைக்கவில்லை. லேட்டா வந்தாலும் சும்மா கெத்தா வந்து இணையத்தை தன் வசப்படுத்தியுள்ளார் கமல்.

Next Story