தேவர்மகன் -2?..கபாலி-2?...ரஞ்சித் - கமல் கூட்டணியில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?...(வீடியோ)....
நடிகர் கமல் தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சுமார் 4 வருடங்கள் கழித்து கமலின் படம் வெளியாவதால் ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். கூடவே லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையில் விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் தனது அதிகாரபூர்வமான அறிக்கையை கூறினார். கமல் சாருடன் இணைந்து படம் பண்ண போகிறேன், அதுவும் மதுரையை மையமாக வைத்து அந்த படம் இருக்கும் என கூறினார். அவர் கூறியதில் இருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அந்த படத்தின் மீது திரும்பியது. ஏனெனில் இருவரும் வெவ்வேறு கோணங்களில் யோசிக்க கூடியவர்கள்.
பா.ரஞ்சித் படம் சாதியை அறவே ஒழிக்க கூடிய கதையாக இருக்கும்.ஆனால் கமல் படம் உயர்ந்த சாதியை மிகைப்படுத்தி காட்டுவதுமாறியான படமாக இருக்கும். மேலும் இருவரின் அரசியல் பார்வையும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும்.ரஜினி நடித்த கபாலி, காலா போன்ற படங்களின் கதையை வித்தியாசமாக காட்டியிருக்கும் பா.ரஞ்தித் தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களை கொடுத்த கமலுடன் சேருவது முற்றிலும் வித்தியாசமாகவே மக்கள் பார்க்கிறார்கள்.
இப்படி இருக்கும் இவர்கள் இந்த படத்தின் மூலம் இணைவது அனைவருக்கும் முதலில் ஆச்சரியத்தையும் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த படத்தின் மீதான தங்கள் எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் அவர்களின் விமர்சனங்கள் வாயிலாக கூறி வருகிறார்கள். மேலும் அவர்கள் கூறுகையில் அரசியலே இருக்ககூடாது எனவும், ஒரு புது கதைகளத்தை உருவாக்கலாம் எனவும் கூறிவருகிறார்கள். இது எப்படி பட்ட படமாக இருக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை இந்த படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்யப் போகிறது என தெரியவில்லை.