More
Categories: Cinema History Cinema News latest news

புகழின் போதையால் அவமதிக்கப்பட்டார் கே. பாலச்சந்தர்…காரணம் ரஜினி, கமல்..?

நீர்க்குமிழி என்னும் படத்தை இயக்கி தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் கே. பாலச்சந்தர். இவர் இப்படத்தை தொடர்ந்து அபூர்வ ராகங்கள், அவர்கள், தப்பு தாளங்கள், அவள் ஒரு தொடர்கதை, நினைத்தாலே இனிக்கும், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கினார்.

இவர் படம் என்றாலே ஆங்காங்கு பேசப்படாத அரசியலும் சமூக சீர்திருத்தம், சமூக அக்கறை கொண்ட கதையாகவே இருக்கும். இவர்தான் ரஜினியும், கமலயும் தமிழ் சினிமா உலகில் முதன்முதலில் அறிமுகப் படுத்தினார்.

Advertising
Advertising

இவர் கமல்லை வைத்துதான் அதிக படங்களை இயக்கியுள்ளார். ரஜினியையும் கமலையும் திரை உலகில் அறிமுகப்படுத்தி வளர்த்து விட்டதால், இவர்கள் இருவரும் கே. பாலச்சந்தரரை தன் வாழ்க்கையின் முன்னோடியாகவே காட்டியுள்ளார்கள். சினிமா நிகழ்ச்சிகளில் இவர் எங்கள் குரு என்றே கூறியுள்ளார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இவர்கள் இருவரும் சேர்ந்து பாலச்சந்தரை அவமதித்த நிகழ்வு நடந்துள்ளதாக தெரியவருகிறது.

தான் இயக்கும் ஒரு படத்தில் அவர்கள் இருவரையும் நடிக்க பாலச்சந்தர் கேட்டுள்ளார், அப்பொழுது ரஜினியும் கமலும் எங்களுக்கு ஒரு இமேஜ் மார்க்கெட் இருக்கிறது அதனால உங்க படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லி அவமதித்து விட்டார்களாம். வேண்டுமானால் இவர் கதைக்கு எஸ் பி முத்துராமன் இயக்கட்டும் இவர் வேண்டுமானால் அந்த படத்தை தயாரிக்கட்டும் என்று கூறிவிட்டார்களாம்.

அதனாலதான் என்னமோ கே பாலச்சந்தர் எஸ்பி முத்துராமன் படத்திற்கு கதை எழுதாமல், அவர் படத்தை தயாரிக்க மட்டுமே செய்து உள்ளார்.

எங்கள் மார்க்கெட் இமேஜுக்கு உங்கள் படத்தில் நாங்கள் நடிப்பது சரிவராது என்று இவரை அவமதித்தது என்னதான் இருந்தாலும் தவறு. இவர்கள் இருவரின் வாழ்க்கையும் புரட்டிப் போட்டு உச்சத்துக்கு எடுத்துக் கொண்டு சென்ற பாலச்சந்திரன் அவமதிப்பது தவறு. பாலச்சந்திரன் நினைத்திருந்தால் இவர்கள் இருவரையும் தன் படத்தில் நடிக்க வைக்காமல் இருந்திருக்கலாம். இல்லை என்றால் இவர்களுக்கு மேலும் மேலும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் இவர்கள் இருவரும் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டு இருக்க முடிந்திருக்காது.

Published by
சிவா

Recent Posts