தீபாவளிக்கு கமல், ரஜினி படங்கள் வந்து விட்டாலே ரசிகர்களுக்கு அது இரட்டைத் தீபாவளியாகத் தான் இருக்கும். அந்த வகையில் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி மோதிக்கொண்டால் அது களைகட்டும். திரையரங்குகளே திக்குமுக்காடிப் போகும். அந்த அளவு ஒரே ஆரவாரமும், ஆர்ப்பாட்டமும், கொண்டாட்டமுமாகத் தான் இருக்கும்.
1983ல் இருந்து தற்போது வரை கமல், ரஜினி படங்கள் நேரடியாக தீபாவளிக்கு ரிலீஸாகி 9 தடவை மோதியுள்ளன.
83ல் ரஜினிக்கு தங்கமகன் படம் வந்து 100 நாள்களும், கமலுக்கு தூங்காதே தம்பி படம் வந்து 175 நாள்களும் ஓடி வெற்றி பெற்றன. 89ல் ரஜினிக்கு நல்லவனுக்கு நல்லவன் 175 நாள்களும், கமலுக்கு எனக்குள் ஒருவன் 100 நாள்களும் ஓடி வெற்றி பெற்றன. அதே போல் 85ல் ரஜினிக்கு படிக்காதவன் 235 நாள்களும், கமலுக்கு ஜப்பானில் கல்யாணராமன் 100 நாள்களும் ஓடின.
86ல் ரஜினிக்கு மாவீரன் 100 நாள்களும், கமலுக்குப் புன்னகை மன்னன் 100 நாள்களும் ஓடி வெற்றி பெற்றன. 87ல் ரஜினிக்கு மனிதன் 175 நாள்களும், கமலுக்கு நாயகன் 175 நாள்களும் ஓடி சம வெற்றிகளைப் பெற்றன. 89ல் ரஜினிக்கு மாப்பிள்ளை 125 நாள்களும், கமலுக்கு வெற்றிவிழா 100 நாள்களும் ஓடி வெற்றி பெற்றன.
91ல் ரஜினிக்கு தளபதி படம் 175 நாள்களும், கமலுக்கு குணா படம் 100 நாள்களும் ஓடியது. 92ல் ரஜினிக்கு பாண்டியன் படம் 100 நாள்களும், கமலுக்கு தேவர் மகன் 175 நாள்களும் ஓடி சாதனை படைத்தன. 95ல் முத்து 185 நாள்களும், கமலுக்கு குருதிப்புனல் 100 நாள்களும் ஓடி வெற்றிவாகை சூடின.
இருவரது படங்களுக்கு இடையேயான போட்டியைப் பார்க்கும்போது ரஜினி படங்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…