கடைசில கமல் சொன்னதுதான் நடந்தது! பாலசந்தர் ஆசைப்பட்டும் நிறைவேற்றாத ரஜினி

Published on: July 26, 2023
rajini
---Advertisement---

தமிழ் திரை உலகில் ஒரு சகாப்தமாக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு பொருந்தக்கூடிய ஒரே நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 70 வயதை கடந்தும் இன்று வரை இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார். ஓய்வு எடுக்கும் வயது தான். ஆனாலும் தன் உடம்பில் பலம் இருக்கும் வரை சினிமாவிற்காக என்ற அந்த எண்ணத்தில் இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சுறுசுறுப்பு அதே வேகம் என அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். சினிமாவில் அவருடைய சாதனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அரசியலில் அவரை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் உள்பட ஆசைப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும் அவரைச் சார்ந்த பல பிரபலங்களும் ரஜினியிடம் அரசியலுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தையும் புகுத்தி இருக்கின்றனர்.

rajini1
rajini1

அதில் முக்கியமாக கருதப்படுபவர் அவரின் ஆஸ்த்தான குருவாக இருந்த பாலச்சந்தர். அந்த காலத்தில் ரஜினியிடம் பாலச்சந்தர் “பெங்களூரில் நீ பேசியதை கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன். அது அரசியலுக்கான ஒரு முன்னெடுப்பு தான். அந்தப் பேச்சில் உன்னுடைய அரசியல் அழகாக தெரிந்தது. அதனால் நீ கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்” என கூறியிருந்தாராம்.

அதற்கு ரஜினி “என்னைப்பற்றி என்னைத் தவிர உங்களுக்கு தான் அதிகமாகவே தெரியும். என்னுடைய சக்தி ,ஆற்றல், திறமை ஆகியவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆசைப்பட்டது போல் விதி என்று இருந்தால் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன்” என அன்று பாலச்சந்தரிடம் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் முதன் முதலாக!. அட இத்தனையா?!.. சாதனை படைத்த எம்.ஜி.ஆரின் அன்பே வா!…

அதே சமயம் அவருடைய சக போட்டியாளரான கமலும் அரசியலின் வருகை குறித்து ரஜினி இடம் அந்த காலத்தில் சொல்லி இருக்கிறாராம். ரஜினியும் கமலும் நெருக்கமான நண்பர்களாக இருந்த சமயத்தில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கமலுக்கும் ரஜினிக்கும் இடையே சில பேச்சுவார்த்தை நடந்திருக்கிறதாம். பாலச்சந்தர் தெரிவித்த கருத்துக்கு நேர் எதிர் மாறான கருத்தை தெரிவித்திருக்கிறார் கமல்.

rajini2
rajini2

அதாவது ரஜினியிடம் கமல் அரசியல் உங்களுக்கு ஒத்து வராது நீங்கள் அரசியலில் இறங்க வேண்டாம் என தன்னுடைய அறிவுரையை அன்றே சொல்லி இருக்கிறாராம் கமல். அதே சமயம் அப்படிச் சொன்ன கமல் தான் இன்று அரசியலில் முழு ஈடுபாட்டுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இது காலத்தின் கோலம் என இந்த தகவலை தெரிவித்த சித்ரா லட்சுமணன் கூறினார். மேலும் தன்னுடைய உடல் நலத்தை காரணம் காட்டியும் கடைசியில் அரசியலில் தீவிரமாக இருந்த ரஜினி ஒரு கட்டத்திற்கு பிறகு தனக்கு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.