செட் ஆகாதுன்னு நிராகரித்த கமல்.. ஸ்கோர் செய்த அஜித்.. இது தெரியாம போச்சே!..
அவ்வை சண்முகி படத்திற்குப் பிறகு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படம் பண்ண ஒப்பந்தம் ஆகிறார்கள் . நடிப்பின் நாயகன் கமல்ஹாசனின் நடிப்புக்கு தீனி போடுற மாதிரி கதையை செதுக்க நினைக்கிறார் ரவிக்குமார் . இதற்கு சிவாஜி கணேசன் நடித்த ”தெய்வமகன்” திரைப்படத்தை உதாரணமாக கொண்டு கதையை எழுதுகிறார். அப்படி எழுதப்பட்ட கதை தான் வரலாறு. இக்கதைக்கு கதாநாயகிகளாக அப்போது உச்சத்தில் இருந்த மீனா மற்றும் குஷ்புவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.
இக்கதை கமலுக்கு பிடிக்கவில்லை என்பதால் நிராகரித்துவிட்டுட்டார். பின்னர் ”தெனாலி” படத்தின் கதைக்கு ஓகே சொல்லி விட்டார். எப்போதும் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு கதையை தயார் செய்து விட்டார் என்றால் ரஜினி மற்றும் கமல் இருவரிடமும் சொல்வது வழக்கமாக வைத்துள்ளார்.
அதன் காரணமாக வரலாறு படத்தின் கதை ரஜினிக்கு தெரிந்திருக்கிறது. ”படையப்பா” படத்தின் வெற்றிக்குப் பிறகு ”ஜக்கு பாய்” என்ற படத்திற்காக மீண்டும் இருவரும் இணைகிறார்கள். ஒரு சில காரணங்களால் அப்படம் கைவிடப்படுகிறது. பின்னர் ரஜினி ”சந்திரமுகி ”படத்திலும் கே எஸ் ரவிக்குமார் ”வரலாறு” படத்திலும் கவனம் செலுத்துகின்றனர். இக்கதை அஜித்துக்கு பிடித்து போக அவர் நடிக்க சம்மதம் தெரிவிக்கின்றார்.
வரலாறு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ”இப்போது எந்த கதையை படமா எடுக்குறீங்க ”என்று கேட்டார். ரவிக்குமார் ”அன்னைக்கு சொன்ன அந்த கதையை தான் எடுக்கிறேன்” என்றார்.
ஒரு நிமிடம் சைலண்டாக இருந்து இந்த கதையை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இதில் நானே நடித்திருப்பேன் என்றாராம் ரஜினிகாந்த். அதன் பிறகு இப்படத்தை முழுமையாக எடுத்து முடித்த பிறகு எனக்கு காண்பியுங்கள் என்றாராம். அதன்படியே ஒரு ஸ்பெஷல் ஷோ ஒன்று ரஜினிகாந்திற்கு போட்டு காண்பித்திருக்கிறார்கள். அதில் அஜித் குமாரின் நடிப்பு மிகவும் பிடித்து போக அஜித் மற்றும் ஷாலினி இருவரையும் வீட்டுக்கு வரவழைத்து பாராட்டினாராம்.
இதையும் படிங்க: உள்ள எதுவும் இருக்கா இல்லையா?!.. திவ்யா பாரதியை உத்து உத்து பார்க்கும் புள்ளிங்கோ…