இதுக்கு மேல தாங்குவாரா...? கமலின் ஆக்ரோஷாமான பேச்சால் பீதி கலங்கி நிற்கும் இயக்குனர்..
கோலமாவு கோகிலா படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன். அந்த ஒரு படத்தின் வெற்றி அவரை எங்கேயோ கொண்டு போனது. தொடர்ந்து டாக்டர் படத்தை எடுத்து அதையும் வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது.
இதையடுத்து விஜய் நடிப்பில் உருவாகி படு தோல்வியை சந்தித்த பீஸ்ட் படத்தின் மூலம் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானர். இதனால் திரைவட்டாரம் கடும் அப்செட்டில் உள்ளனர். இதற்கிடையில் இந்த படத்தின் தோல்வியால் இவரின் முந்தைய பேட்டியை வைத்து இவரை சிலர் கண்டித்து வருகின்றனர்.
அந்த பேட்டியில் இவர் பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவிற்கு வந்தேன் படத்தால் நமக்கு என்ன லைஃப் டைம் இருக்கு என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கமலின் ஒரு மேடை பேச்சை நெட்டிசன்கள் எடிட் செய்து நெல்சனை கமல் தாக்குவது போல இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இதையும் படிங்கள்; ஸ்கூல் டைம்லயே பிட்டு படம் பார்த்திருக்கேன்… பிரபல நடிகை ஓப்பன் டாக்….!
அந்த மேடையில் கமல் அவர்கள் பணம் சம்பாதிக்க வியாபாரம் பண்ணி பணம் சம்பாதிக்கலாம் இல்ல வேறு வியாபாரம் கூட இருக்கு அதுக்கு ஏன் சினிமாவிற்கு வரணும் என கேட்டிருப்பார். இதனால் இது நெல்சனுக்கு பொருத்தமான ஒரு பதில் தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.