யாருக்கும் செய்யாத ஒன்றை கமலுக்கு செய்த இசைஞானி...அட இது தெரியாம போச்சே!...
நடிகர் கமல் நடிப்பில் 2000 ஆம் ஆண்டில் வெளியான படம் ஹேராம். இந்த படத்தில் ராணிமுகர்ஜி, வசுந்தராதாஸ், பிரேமா மாலினி, போன்றோர் நடித்திருப்பர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு இசைஞானி இளையாராஜா இசையமைத்திருந்தார்.
படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட். இந்த படத்தில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இளையராஜாவிற்கு முன் இந்த படத்திற்கு வயலின் வித்துவான் எல்.சுப்பிரமணியம் இசையமைத்திருந்தார். இவர் இசையமைத்த பாடல்களுக்கு எல்லாம் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டனவாம்.
திடீரென அவருக்கும் கமலுக்கும் சம்பளப்பிரச்சினையில் கருத்து வேறுபாடு எழ சுப்பிரமணியம் படத்தில் இருந்து விலக்கப்பட்டாராம். அதன் பிறகு இளையராஜாவை அணுகியிருக்கிறார் கமல். அதுவரை வேறு எந்த இசையமைப்பாளரும் ஏற்கெனவே இசையமைத்த படத்திற்கு இவர் இசையமைக்க மாட்டாராம்.
ஆனால் கமல் வந்து கேட்டதின் பேரில் கமல் மேல் உள்ள பிரியத்தின் பேரில் அந்த படத்திற்கு இசையமைத்துக் கொடுத்தாராம் இளையராஜா. மேலும் கமலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் ஏற்கெனவே படமாக்கியிருப்பீர்கள் அல்லவா அதை காட்டுங்கள் அதை வைத்தே நான் இசையமைத்துத் தருகிறேன் என பெருந்தன்மையோடு கூறினாராம் இளையராஜா.