Connect with us
kamal

Cinema News

கதை பிடிக்காமல் நோ சொன்ன கமல்! ரஜினி நடித்து சூப்பர் ஹிட்டான எவர்கிரீன் திரைப்படம்

Rajini vs Kamal: நட்புக்கு இலக்கணமாக தமிழ் சினிமாவில் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ரஜினியும் கமலும். தொழில் முனையில் போட்டிகள் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர்களை போல் ஒரு நல்ல நண்பர்களை சினிமாத்துறையில் பார்க்கவே முடியாது.

அதை பல மேடைகளில் இருவரும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். தங்களுக்குண்டான நட்பு எந்தளவு ஆழம் என்பதையும் மறைக்காமல் வெளிப்படையாகவே சொல்ல கேட்டிருக்கிறோம். பொன்னியின் செல்வன் மேடையில் ரஜினியும் கமலும் மாறி மாறி நட்பு பாராட்டியதை இன்றுவரை மறக்க முடியுமா?

இதையும் படிங்க: ரஜினி பக்கத்துல இருக்க வேணாம்!.. ஷூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய விஜய்!.. அப்ப அது உண்மைதானா?..

எங்களைப் போல் நட்பு பாராட்டக் கூடிய கலைஞர்கள் எங்கள்  முந்தைய தலைமுறையிலும் இருந்ததில்லை இனிவரும் தலைமுறையினர் எப்படி என்றும் தெரியவில்லை என சவால் விடுவது போல் கமல் ஒரு மேடையில் பேசியிருக்கிறார்.

அந்தளவுக்கு ரஜினி மீது கமலும் கமல் மீது ரஜினியும் அன்பும் மரியாதையும் நட்பும் வைத்திருக்கின்றனர். மேலும் சினிமா சம்பந்தப்பட்ட எந்த விஷயமானாலும் கமலிடம் ஆலோசனை பெற்ற பெறகே முடிவெடுப்பதாக ரஜினியும் தெரிவித்திருந்தார்.

அது இன்றுவரை தொடர்வதாகவும் சொல்லியிருந்தார். அப்படி ஒரு நெருக்கத்தில் இருக்கும் இவர்களில் கமல் ஒரு ஸ்டாராக இருக்கும் போதுதான் ரஜினி சினிமாவிற்குள் வந்தார். அவர் இந்த கோடம்பாக்கத்தில் நுழைந்ததும் முதலில் கமலை பார்த்துதான் பயந்ததாக ஏற்கனவே ரஜினி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் நடித்து பாதியிலேயே விடப்பட்ட திரைப்படத்தில் நடித்த சிவாஜி! அட இதெல்லாம் சின்னவர் நடித்த படமா?

ஒரு அழகான, நடனம் நன்கு ஆடத் தெரிந்த ஒருவர் ஏற்கனவே நடிகராக இருக்கும் போது நம்மால் இந்த சினிமாவில் பயணிக்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்ததாக ரஜினி கூறியிருக்கிறார். இருந்தாலும் ஆரம்பகாலங்களில் ரஜினி கமலுடன் சேர்ந்துதான் பல படங்களில் ஒன்றாக நடித்தார்.

இப்படி பல பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக நம் கண்முன் நிற்கிறார் ரஜினி. இந்த நிலையில் ரஜினியின் நடிப்பில் வெற்றி நடை போட்ட திரைப்படம் புவனா ஒரு கேள்விக் குறி. இந்தப் படத்தில் ரஜினியும் சிவக்குமாரும் நடித்திருப்பார்கள்.

இதையும் படிங்க: ரஜினி பக்கத்துல இருக்க வேணாம்!.. ஷூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய விஜய்!.. அப்ப அது உண்மைதானா?..

முதலில் ரஜினி நடிக்க இருந்த கேரக்டரில் சிவக்குமாரும் சிவக்குமார் நடிக்க இருந்த கேரக்டரில் ரஜினியும்தான் நடிக்க இருந்ததாம். அதன் பிறகுதான் மாறியிருக்கிறது. ஆனால் ரஜினி நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது கமல்தானாம்.

ரஜினி , சிவக்குமாருக்கு முன்னாடியே இந்தப் படத்தின் கதையை கமல் படித்து கதை பிடிக்காமல்தான் வேண்டாம் என சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் ரஜினிக்கு அந்த வாய்ப்பு போனதாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top