kamalhaasan: தமிழ் சினிமாவில் வழக்கமான பாணியில் சினிமா எடுப்பவர்களுக்கு நடுவில் வித்தியாசமாக யோசித்து குறிப்பாக அவ்வப்போது பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்த வெகு சிலரில் கமல்ஹாசனும், பார்த்திபனும் முக்கியமானவர்கள். அதிலும் சொந்த காசை போட்டே இருவரும் அந்த சோதனையை செய்து கையை சுட்டுக்கொண்டவர்கள்தான்.
ஆனாலும், இருவருக்குமே சினிமாவின் மீது இருக்கும் காதலும், ஆர்வமும் இப்போது வரை குறையவே இல்லை. பல வருடங்களுக்கு முன்பே பேசும் படம் என்கிற படத்தில் பேசாமலே நடித்திருந்தார் கமல். ராஜபார்வை படத்தில் ஒரு குருடனின் காதலை அழகாக காட்டியிருந்தார். குணா, மகாநதி, ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ் என பல பரிசோதனை முயற்சிகளை கமல் செய்து பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த காலத்திலேயே சர்ச்சையை கிளப்பிய கமல் பட பாடல்… ஆண்டவரை காப்பாத்தினதே அவர்தானாம்!…
அதேபோல்தான் பார்த்திபனும். ஒரு தியேட்டரில் நடக்கும் கதையென ஹவுஸ்புல் படத்தை எடுத்தார். சுகமான சுமைகள், குடைக்குள் மழை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் என பாத்திபனும் பல முயற்சிகளை செய்து பார்த்தார். இதில், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மட்டுமே வெற்றி பெற்றது. ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் ஆகிய இரண்டு படங்களும் விருதுகளை பெற்றது.
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில் ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடித்திருக்கும். அவரின் முகம் மட்டுமே காட்டப்படும். அவரை சுற்றிமட்டுமே கதை நடக்கும். உண்மையில் இந்த ஐடியா 20 வருடங்களுக்கு முன்பே கமலுக்கு வந்துள்ளது. இந்த தகவலை தமிழ் சினிமாவில் பிரபல வினியோகஸ்தராக இருந்த ஆனந்தன் சுரேஷ் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: கமல் குடும்பத்துக்கு ‘ஹாசன்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?!.. அடடே ஆச்சர்ய தகவல்!…
ஒருமுறை நானும், கமலும் இரயிலில் பயணம் செய்த போது ஒருவரை மட்டுமே சுற்றி நடக்கும் கதையை கமல் சொன்னார். ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். இது பரிசோதனை முயற்சிதான். நீங்கள் ஏன் தயாரிக்க கூடாது எனக்கேட்டார். உங்களுக்கு சம்பளம் கொடுக்கமாட்டேன். படம் லாபம் பெற்றால் அதில் உங்களுக்கு பங்கு தருகிறேன் என்றேன். ஆனால் அதன்பின் அது நடக்கவில்லை.
பார்த்திபன் என்னிடம் இந்த படம் பற்றி சொன்னபோது இதை அவரிடம் சொன்னேன். இந்த படத்தின் துவக்கவிழாவிற்கு நானும், கமலும் சென்றிருந்தோம். அப்போது பேசிய பார்த்திபன் ‘கமல் சார் 20 வருடத்திற்கு முன்பே எடுக்க நினைத்ததை நான் எடுத்துவிட்டேன் என்பதில் எனக்கு பெருமை’ என பார்த்திபன் பேசினார்’ என ஆனந்தன் சுரேஷ் கூறியிருந்தார்
இதையும் படிங்க: தசாவதாரம் ‘பல்ராம் நாயுடு’ கேரக்டரை கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!…





