தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த கமல்!.. அட ஆண்டவர் இவ்வளவு நல்லவரா?!..

Published on: April 27, 2023
kamal
---Advertisement---

சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு படம் ஓடும் இல்லை ஓடவில்லை என்றால் முதலில் அந்த பாதிப்பு அந்தப் படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்குத் தான். எத்தனையோ வட்டிகளில் கடனை வாங்கி ஒரு படத்தை எடுத்து அந்தப் படம் ஓடவில்லை என்றால் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நினைத்து பார்த்தாலே
அனைவருக்கும் விளங்கும்.

இதில் நடிகர் கமலை வைத்து தயாரிப்பாளர் தேனப்பன் எடுத்தப் படம் தான் ‘காதலா காதலா’. இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தான் இயக்க வேண்டும் என தேனப்பன் எண்ணினாராம். ஆனால் அது நடக்காமல் போனது தான் இன்று வரை அவரின் வருத்தமாக உள்ளது என ஒரு பேட்டியில் கூறினார்.

இந்தப் படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்க கார்த்திக் ராஜா இசையில் 1998ஆம் ஆண்டும் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் கமல், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா , நாகேஷ் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

கமலின் நடிப்பில் வெளியான நகைச்சுவை படங்களில் சிறந்த நகைச்சுவை படமாக காதலா காதலா திரைப்படம் அமைந்தது. படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூலை அள்ளியது. இதைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் தேனப்பன் நல்ல லாபம் வந்ததும் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கமலின் வீட்டிற்கு சென்றாராம்.

இதையும் படிங்க : விமானத்தில் இருந்து போஸ்டர்களை தூக்கி எறிந்த எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளர்… இப்படி ஒரு புரொமோஷனா?

கமல் ஏற்கெனவே அந்தப் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் அவர்தான் பார்த்துக் கொண்டாராம். இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு கொடுத்தப் போது கமல் ‘இதை வைச்சு உன் குடும்பத்த பாத்துக்கோ, எனக்கு தேவையான சம்பளம் எனக்கு வந்து விட்டது, இது உங்களுடைய லாபம் தான்’ என்று கூறினாராம். இதை போல பல தெரியாத பல விஷயங்கள் கமலை பற்றி நிறைய இருக்கின்றது என தேனப்பன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.