விட்டா எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பேன்! கமலை பற்றிய சீக்ரெட் தெரிஞ்ச ஒரே நபர்
தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். ஆழ்ந்த கருத்துக்கள், சினிமாவை பற்றிய ஒரு அழுத்தமான முற்போக்கு சிந்தனை என்று சினிமாவின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் கமல். நடிப்பையும் தாண்டி இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவராக இருக்கிறார்.
இந்த நிலையில் கமலை பற்றிய ஒரு சுவாரசியமான அனுபவத்தை ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்து இருக்கிறார் இயக்குனர் ராசி அழகப்பன். ராசி அழகப்பன் சிறுவர்களுக்காக வண்ணத்துப்பூச்சி என்ற திரைப்படத்தை இயக்கினார் .அந்த திரைப்படம் சிறந்த குடும்ப நெறிமுறைகளுக்கான படம் என்று தமிழக அரசின் விருதை பெற்றது. அது மட்டும் இல்லாமல் பல கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளையும் எழுதி உள்ளார் ராசி அழகப்பன்.
கமலுக்கு நெருக்கமானவர்
கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் ,மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், விருமாண்டி, குணா, மகளிர் மட்டும் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆர்கே செல்வமணி இயக்கிய மக்களாட்சி படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
இவர் பெரும்பாலும் கமல் படங்களிலேயே பணி புரிந்ததால் கமலுக்கு மிக நெருக்கமானவராகவும் மாறினார். ஒரு சமயத்தில் ராசி அழகப்பனை தன் கூடவே வைத்திருக்க விரும்பிய கமல் வெளியில் விடவே இல்லையாம் . தன்னுடனே இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம். "இது ஒரு பக்கம் எனக்கு நன்மையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சரியாகப் படவில்லை. ஏனெனில் "இவன் கமல் கூடவே இருக்கிறான். அதனால் கமலின் அறிவும் புத்தியும் இவனுக்கும் இருக்கும். அதே சமயம் கமல் மாதிரி இவனும் யோசித்தால் பெரிய செலவையும் எழுத்து வைப்பான் "என்றும் பட வாய்ப்புகள் இவரைத் தேடி வரவே இல்லையாம்".
இதையும் படிங்க :தகாத உறவில் சில்க் ஸ்மிதா! தற்கொலைக்கு இதுதான் காரணமா இருக்குமோ?
சொல்லட்டுமா அந்த ரகசியத்தை?
மேலும் கமலை பற்றி ஒரு வாழ்க்கை வரலாறை எழுதச் சொன்னால் கூட 90% ராசி அழகப்பனால் எழுத முடியுமாம். ஏனெனில் ஒரு நாளைக்கு 17, 18 மணி நேரம் கமல் கூடவே இருந்தவர் இவர் மட்டும்தானாம். அதனால் நிறைய ரகசியங்களை இவருடன் கமல் பகிர்ந்து இருக்கிறாராம். அது கமலின் சொல்லப்படாத மறுபக்கம் என்று ராசி அழகப்பன் கூறினார். அதனால் அது அப்படியே இருக்கட்டும் என்றும் கூறினார்.