இத்தனை பெண்களுடன் காதலா? கேள்வி கேட்ட நிரூபருக்கு சாட்டையடி பதில் கூறிய கமல்

Published on: October 4, 2023
kamal
---Advertisement---

Kamal Love Story: தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் ஒரு காதல் மன்னனாக வாழ்ந்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன். இவருடன் நடித்த பெரும்பாலான நடிகைகள் கமல் மீது காதல் வலையில் வீழ்ந்ததாக ஏகப்பட்ட வதந்திகள் வந்தன.

மேலும் ஒரு சில நடிகைகள் கமல் படத்தில் நடிக்கவே பயந்தார்கள். ஏனெனில் அவரின் படங்களில் பெரும்பாலும் முத்தக்காட்சிகள் இடம்பெறும். அதுக்கு பயந்த்தே பெரும்பாலான நடிகைகள் கமல் படத்தின் வாய்ப்பும் வந்தும் நடிக்காமல் மறுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அடங்கப்பா… இப்போவாது மனசு வந்துச்சே… விடாமுயற்சி டீமுக்கு ஷாக் கொடுத்த அஜித்..!

சினிமா வாழ்க்கை ஒரு பக்கம் இப்படி இருக்கிறது என்றால் அவரது நிஜ வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்திருக்கிறார்.இரண்டு திருமணங்கள். வரிசையாக விவாகரத்து. இரண்டு பெண் குழந்தைகள். தொடர்ந்து நடிகைகளுடன் கிசுகிசு என தொடர் பிரச்சினைகள் சந்தித்தார்.

இந்த சமயத்தில் ஒரு நிரூபர் இப்படி கல்யாணம், விவாகரத்து, அடுத்த காதல் என பல பிரச்சினைகளை சந்திக்கும் கமலுக்கு பெண்கள் மீது மரியாதையே இல்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறதே? அதைப் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா? என்ற கேள்வியை முன்வைத்தார்.

இதையும் படிங்க: லியோ படம்லாம் இருக்கட்டும்!. விஜய் நடித்து பாதியில் நின்ற 4 படங்கள் பற்றி தெரியுமா?…

அதற்கு கமல் ‘இப்பொழுது என் சொந்த விஷயம் சந்தோஷமாக இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். எனக்கு ஏற்பட்ட சோகங்கள், இழப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல. இந்தப் பிரச்சினைகளில் நாம் எப்போதுமே மற்றவர்களை பற்றி அவதூரு பேசியதில்லை.

இது என் தனிப்பட்ட விவகாரம். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்டும் சமாச்சாரம். இப்பவும் சொல்றேன். இந்த உறவுகள் இல்லை என்றாலும் எனது இரு மகள்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமை இருக்கிறதே? அது மிகப்பெரியது. அதிலிருந்து துளி கூட விலக மாட்டேன்’ என்று அந்த நிரூபருக்கு கமல் பதில் அளித்திருந்தார்.

இதையும் படிங்க: தசாவதாரம் ‘பல்ராம் நாயுடு’ கேரக்டரை கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.