உத்தமவில்லன் படத்திற்கான சர்ச்சை தொடர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி. படம் தோல்வி தான். இவர் ஆரம்பத்தில் ஒன்றும் பெரிதாக சொல்லாமல் இப்போது படத்தைப் பற்றி கிளறி இருக்கிறார். இவர் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திடம் போய் புகார் கொடுத்துள்ளாராம். 50 கோடி பட்ஜெட்ல படம் உருவாச்சு. அதுல நான் 35 கோடி ரூபாய் போட்டுருக்கேன். இதுல 15 கோடி ரூபாயை கமலோட சம்பளமா எடுத்துக்கறேன்.
இதையும் படிங்க… எனக்கு 70 உனக்கு 80.. ‘வேட்டையன்’ செட்டில் இருந்து படுமாஸாக போஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்கள்
எனக்கு 35 கோடி நஷ்டம். இதனால நாங்க சொல்ற கதைல கமல் சார் நடிக்கணும் என்று சொல்லி இருக்கிறார். இது ரொம்ப ரொம்ப தவறான விஷயம் தான் என்கின்றனர் கமலின் ரசிகர்கள்.
படம் உருவானபோதே கமலுடன் விவாதம் செய்து அவருக்குப் பிடித்த காட்சிகளை மட்டும் எடிட் செய்திருக்கலாம். அப்படி இல்லாமல் ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று அப்போதே சண்டை போட்டு இருக்கலாம். அதெல்லாம் விட்டு விட்டு அப்போது கமலுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டு அவரோட பேச்சு, எண்ணப்படி நடந்து கொண்டு இப்போது விவாதம் செய்வது முறையல்ல.
முன்னதாக கேஎச்237 கூட லிங்குசாமியுடன் இணைந்து கமல் பண்ணுவதாக இருந்ததாம். அப்போது லிங்குசாமியும் பழைய பிரச்சனைகளைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால் இப்போது லிங்குசாமி இப்படி ஒரு புகார் கொடுத்து இருப்பது திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
2015ல் கமல், கிரேசி மோகன் கதை எழுத, ரமேஷ் அரவிந்த இயக்கிய படம் உத்தமவில்லன். கமல், பாலசந்தர், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தயாரித்தவர்கள் கமல் மற்றும் லிங்குசாமி. படத்தைக் கலைப்படமாக எடுத்துள்ளதால் பெரும்பாலான ரசிகர்களைச் சென்று அடையவில்லை. ஆனால் இது குணா, அன்பே சிவம் போல் காலம் கடந்து பேசப்படும் படமாகவும் இருக்கலாம்.
இந்தப் பிரச்சனையில் கமல் என்ன முடிவு எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கமலைப் பொறுத்தவரை யாரும் அவருக்கு ஆர்டர் போட முடியாது. ஏனென்றால் சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். அவரிடம் போய் நான் சொல்ற கதைல தான் நடிக்கணும் என்று லிங்குசாமி சொல்வது எடுபடுமா என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…