அனிருத்துக்கு அல்வா கொடுத்த ஆண்டவர்... விக்ரம் மெகா ஹிட்டை மறந்துடீங்களா கமல் சார்.?!

by Manikandan |
அனிருத்துக்கு அல்வா கொடுத்த ஆண்டவர்... விக்ரம் மெகா ஹிட்டை மறந்துடீங்களா கமல் சார்.?!
X

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கமல்ஹாசனின் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் 'விக்ரம்' திரைப்படம் ஏழு வார திரையரங்குகளில் மட்டுமல்ல, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் அதன் ஸ்ட்ரீமிங் காட்சிகளிலும் ஆல் டைம் ரெக்கார்ட் தனித்துவமாக மாறியுள்ளது.

இந்த படத்தில், கமலை தவிர விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தில் அனிருத் ரவிச்சந்தரின் தலைசிறந்த பின்னணி இசையமைத்திருப்பது படத்தின் வெற்றிகளின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

தற்போது, கமல் அடுத்ததாக ஷங்கரின் 'இந்தியன் 2' படப்பிடிப்பை இந்த ஆண்டின் இறுதியில் தொடங்குவார் என கூறப்படுகிறது இதில் அனிருத் மீண்டும் இசையமைக்கிறார். இந்த மூவரின் கூட்டணியில் புது வித காம்போவை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதையும் படிங்களேன் - ஒரே கதை ரெண்டு படம்.. அஜித்திற்கு அல்வா கொடுத்த விக்னேஷ் சிவன்… பின்னணியில் நயன்தாரா…

anirudh

இதற்கிடையில், உலகநாயகன் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பையும் தொடங்கவுள்ளார். இந்த படத்திற்காக தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இப்போது, இந்த படத்தின் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், படத்திற்கான இசையமைப்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாருமல்ல, மலையாளத் துறையில் கலக்கும் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் தான். இவர், பல்வேறு மலையாள படத்தில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story