Cinema History
கமல் பாடலால் வந்த பிரச்சினை! இதை என்னால் எடுக்க முடியாது – படத்தை விட்டே விலகிய இயக்குனர்..
எந்த ஒரு படமும் பிரச்சனை இல்லாமல் நிறைவடைந்ததாக சரித்திரமே இல்லை. ஏதாவது ஒரு விதத்தில் சில பல பிரச்சனைகள் எழுந்து சுமூகமாக முடிந்து அதன் பிறகு அந்த படம் வெளியாகும். இயக்குனர்களுக்கு இடையே சில பல கருத்து வேறுபாடுகள் நடிகர் நடிகைகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் என ஏதாவது ஒரு உருவத்தில் பல பிரச்சினைகள் வந்து போயிருக்கின்றன. அப்படி கமல் படத்தில் எழுந்த ஒரு பிரச்சனையால் அந்தப் படத்தின் இயக்குனர் படத்தை எடுக்க மாட்டேன் என்றே சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
களத்தூர் கண்ணம்மாவில் இப்படி ஒரு பிரச்சினையா?
கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் களத்தூர் கண்ணம்மா. அந்தப் படம் கணவன் மனைவிக்கு இருக்கும் காதல் கதையை மையமாக வைத்தும் அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட பிரிதல் அவர்களுக்கு பிறந்த குழந்தையால் மீண்டும் அந்த கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்வது இவைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. முதலில் இந்த படத்தை இயக்கியவர் பிரகாஷ் ராவ்.
இதையும் படிங்க : சினிமாவில் சாதிக்க அழகு வேண்டாம்!.. நடிப்பில் ஸ்கோர் செய்த நடிகைகளின் பட்டியல்…
அதேபோல கமல் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த குழந்தை நட்சத்திரம் டெய்சி ராணி. ஆனால் ஏவிஎம் வீட்டில் கமலஹாசன் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அவர் பலவிதமான வசனங்களை பேசி மெய்யப்ப செட்டியாரை ஆச்சரியத்தில் திகைத்து இருக்கிறார். அந்த ஒரு ஈர்ப்பால் டெய்சி ராணிக்கு பதிலாக கமலஹாசனை இந்த படத்தில் அறிமுகப்படுத்தினாராம் மெய்யப்ப செட்டியார். அதேபோல இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அந்த அளவுக்கு கதை இல்லாமல் தான் இருந்ததாம்.
கமலுக்கு ஏன் இவ்ளோ முக்கியத்துவம்
ஆனால் கொடுத்த வசனங்களை கச்சிதமாக பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் திகைத்ததால் கமலஹாசனின் கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றுவதற்காக இந்த படத்தின் கதைகளை கொஞ்சம் மாற்றி அமைத்தாராம் மெய்யப்ப செட்டியார். அதேபோல கமல்ஹாசன் நடித்த அந்தப் பாடலான அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் முதலில் ஒன்றரை நிமிட பாடலாக தான் அமைக்கப்பட்டிருந்ததாம்.
அதையும் நாலரை நிமிஷ பாடலாக மாற்றும்படி மெய்யப்ப செட்டியார் கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு பிரகாஷ் ராவ் கொஞ்சம் கூட இசைய வில்லையாம். ஏற்கனவே படமாக்கி முடித்த காட்சியை மீண்டும் படமாக்குவதற்கு பிரகாஷ்ராவிற்கு விருப்பம் இல்லாததால் பாதி படத்திலிருந்து விலகுவதாக சொல்லிவிட்டாராம். அதுமட்டுமில்லாமல் “முதலில் நான் இந்த படத்தை எடுக்கும்போது ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் இடையே இருக்கும் அந்த காதல், பாசம் இதை மையமாக வைத்து மட்டுமே படமாக்க சொன்னீர்கள். இப்பொழுது இந்த குழந்தை கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கதையை மாற்ற சொல்கிறீர்கள். இதை என்னால் செய்ய முடியாது” என்றும் சொன்னாராம்.
அதனால் மெய்யப்ப செட்டியார் இனி அவர் எப்படி படம் எடுத்தாலும் அது நமக்கு விருப்பமில்லாத மாதிரியே தெரியும். அவர் விருப்பப்படியே விட்டுவிடலாம் என்று பிரகாஷ் ராவின் வேண்டுகோளை ஏற்று இருவரும் உட்கார்ந்து பேசி சுமுகமாக இந்த பிரச்சினையை தீர்வுக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு இந்தப் படத்தில் பீம்சிங் இயக்குனராக பணியாற்றினாராம்.
இதையும் படிங்க : நாடகத்தை நிறுத்துங்க!.. இயக்குனர் வரார்!.. நடிகருக்கு அதிர்ச்சி கொடுத்த பாலச்சந்தர்..