Connect with us

Cinema History

நம்பினால் நம்புங்கள்……ரஜினி முன்னிலையில் அறிவு, ஞானத்தைப் பற்றி புட்டு புட்டு வைத்த கமல்….!!!

ஒருமுறை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விவேக் கமலிடம் கேள்விகள் கேட்டார். அதற்கு சரமாரியாக கமல் சொன்ன பதில்களின் தொகுப்பு தோரணம் தான் இது.
அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னிலையில் கமல் இந்தப் பதில்களைத் தெரிவிக்கும் போது அரங்கில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
கமல் உதிர்த்த ஒரு சில வார்த்தைகள்…

kamal

காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. காதல் எல்லோருக்கும் வரும். அதில் மன்னர்கள் யாருமில்லை. அதுவாகவும் கொஞ்சநாள் வாழ்ந்து பார்த்துவிட்டேன். அவ்வளவு தான். மற்றபடி களமிறங்கும் கமல். அது என் குரல். உங்கள் ருரல்.

என்னைப் பேச வைத்துக் கொண்டிருக்கும் உணர்வு குரல் எல்லாம் மக்களின் குரல் தான்.

kamal2

நான் யானையாக இருந்தாலும் கூட மதம் பிடிக்காமல் தான் பார்த்துக்கொள்வேன். இப்பொழுதும் அவ்வாறே. வயது கூட கூட ஞானமும் வயதும் அறிவும் கூடும். அறிவு கூட கூட அதைப் பகுத்தறியும் உணர்வும் கூடியே தீரும். சொல்ல வேண்டிய விஷயங்களை அழுத்தமாக சொல்ல வேண்டும்.

மோட்டார் சைக்கிள்ல ஆக்சிலேட்டரைக் கூட்டிக்கிட்டே போற மாதிரி. சில விஷயங்களைப் பொத்தமாம் பொதுவாக சொல்லும்போது அது கெட்டவார்த்தை போல தோன்றும். அதற்காக நான் பூடகமாக நல்ல தமிழ் சொற்களை உபயோகிக்கும்போது சில தமிழர்களுக்கு அது புரியாமல் போகலாம். அதுவும் நல்லதே.

தேவை என்பது மனிதனுக்கு எல்லை இல்லாத விஷயம். இது போதும் என்று வந்துவிட்டாலே மனிதனுக்கு ஞானம் வந்து விட்டதாக அர்த்தம். எனக்கு எது தேவை என்பதே தெரியாமல் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பது தான். காரணம் இது மட்டும் தேவை என்று தெரிகிறது. இந்த கரகோஷம் தேவை என்று தெரிகிறது. இதற்கான தகுதிகள் என்ன என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எனக்கு அது இருக்கிறதா என்று நீங்கள் சொல்லும்போது இருப்பது போன்ற ஒரு சந்தேகம் வருகிறது. நான் தனிமையில் அமர்ந்து யோசிக்கும் பொழுதும், என் முன்னோர்களைப் பற்றிச் சிந்திக்கிற பொழுது அந்தத் தகுதி இனிமேல் தான் வர வேண்டும். அதற்கான முயற்சி செய்து கொண்டு போனாலும் அது நல்ல முயற்சியே.

kamal and sivaji

நாங்கள்லாம் சின்ன வயசுல நடிகர் திலகத்தோட வசனத்தைப் பேசிப் பேசிப் பழகுவோம். அப்படி பார்த்து வளர்ந்த இந்த பிள்ளை எழுதிய வசனத்தை நடிகர் திலகமே பேசினார்.

அதை விட பெருமை என்ன இருக்க முடியும்? தேவர் மகன் படத்துல நான் எழுதுன டயலாக்க எனது நாயகன் பேசுனாரு. விதை நான் போட்டது…அது உங்களுக்கும் ரொம்ப பிடிச்ச வசனம். ஏன்னா நீங்களும் அதை அறியாம செஞ்சிக்கிட்டு இருக்கீங்க..

google news
Continue Reading

More in Cinema History

To Top