தப்பிச்சு வந்துருக்கேன்... நான் போகனும்...! விழா மேடையில் கெஞ்சிய கமல்...

by Rohini |   ( Updated:2022-05-14 10:21:18  )
kamal_main_cine
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் விக்ரம். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாஸில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜுன் 3ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

kamal1_cine

இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் கமலை உச்சந்தலையில் வைத்து உருகி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் மீண்டும் திரையில் தோன்றுவது அனைத்து ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சியை தருவது போல இருக்கிறது.

இதையும் படிங்கள் : இன்னைக்கு இது போதும்!…பாவாடையை பறக்கவிட்டு பாடா படுத்தும் ஆண்ட்ரியா….

அந்த பாடலில் அரசியலை எந்த அளவுக்கு திணிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு திணித்து கமலே பாடியுள்ளார். அதை கேட்டு பல அரசியல் பிரபலங்கள் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சமூக ஆர்வலர் கமல் மீது போலீஸில் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

kamal2_cine

ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத கமல் இன்று திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் நடத்தும் விழா ஒன்றிற்கு சென்று விழாவை சிறப்பித்துள்ளார். அப்போது பேசிய கமல் ஐசரி கணேசனையும் அவர் செய்யும் நல்ல விஷயங்களை பற்றியும் பேசி உறையாற்றினார். உறை நிகழ்வின் போது எனக்கு சென்சார் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, தப்பிச்சு வந்துருக்கேன், நான் போகனு, மன்னிக்கவும் என கேட்டு விடை பெற்றார்.

Next Story