சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்தை வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் உலகநாயகன் கமலஹாசன், சிம்பு, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஐசரி கணேசன் என பலரும் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய உலகநாயகன் கமல்ஹாசன், தமிழ் சினிமாவை எந்த ஒரு நடிகரும் காப்பாற்றவில்லை. ரசிகர்கள் தான் இதுவரையில் தமிழ் சினிமாவை காப்பாற்றி வந்துள்ளனர். ஒரு படம் நன்றாக இருந்தால் அப்படத்தை ரசிகர்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள். என்று பேசுகிறார். அப்போது அரங்கத்தில் சிம்பு, ஏ.ஆர்.ரகுமான், யுவன் மற்றும் சில கலைஞர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்களேன் – அந்த விஷயத்திற்காக ஹீரோயினை செலக்ட் செய்யும் ஹீரோக்கள்.. உண்மையை தோலுரிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்….
இந்த கருத்து இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. ஏனென்றால் சிலர் இந்த நடிகரின் படம் வந்தால் தமிழ் சினிமா காப்பாற்றப்பட்டுவிடும் என்று சிலரது பெயர்களை கூறுவதுண்டு. அப்படி கூறப்பட்ட பெயர்கள் கொண்ட நடிகர்கள் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான விக்ரம், டான், திருச்சிற்றம்பலம், மாநாடு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்களேன் – மேடையில் தனுஷை வச்சி செய்த சிம்பு.?! உண்மையில் நடந்தது என்ன.?! ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்…
இதனை வைத்து பார்க்கையில் எந்த நடிகர், எத்தனை கோடி பட்ஜெட், படத்தில் வேறு யார் நடிக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. படத்தின் கதைக்களம், திரைக்கதை சுவாரசியமாக இருந்தாலே போதும் அது யார் படமாக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றி அடைந்து விடும் என்பதை தான் கமல்ஹாசனும் கூறியுள்ளார் என்பது நிரூபணமாகி விடுகிறது.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…