அதுதான் என் முதல் காதல்.. அப்புறம்தான் எல்லா காதலும்.. கமல் சொல்றத கேளுங்க!...
விக்ரம் 100வது நாள் புரோமோவில் கமலின் சுவாரசியமான பேட்டியின் தொகுப்பு தோரணம் இதோ..உங்கள் பார்வைக்கு..!
நீங்க எல்லாருமே கனவு காண்பவர்கள் தான். அதில என்னைக்காவது ஒருநாள் பேரு சொல்லிக்கூப்பிட்ட ஞாபகம் உங்களுக்கு இருக்கா? கனவில் நான் அவ்ளோ தான். அதனால் தான் நான் உங்கள் நான் என்கிறேன்.
இந்த விக்ரம் பற்றி அறிமுகமில்லாத புது ஆடியன்ஸ்க்கு நான் விக்ரம்...நேற்று என்னோட உதவியாளர் இந்த ஷீல்டு எல்லாம் கொடுக்கும்போது சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்போ உள்ளே போனாரா...விக்ரம் தானே..! கமல்ஹாசன் காணோம்...
பட்டங்கள்...வெவ்வேறு பட்டங்கள்...ஒரு காலத்துல வயசு குறைவா இருந்தபோது இளவரசன்னாங்க...அப்புறம் நாயகன்னாங்க...அப்புறம் உலகநாயகன் னாங்க...இதெல்லாம் பட்டம்...ஆனா...நான் வந்து அன்பாக ஏற்றுக்கொள்வேன்...மற்றபடி பட்டம் பறக்கவிடுவதுதான்...பறக்க விட்டுருவேன்..நான் உங்கள் நான்..அவ்ளோ தான்...!
பாலச்சந்தர் அவர்கள் முகவாக்கட்டையைப் பிடிச்சி...இப்படி பண்ணாத...இப்படி பண்ணு...அவ்ளோ வேண்டாம்டா...பொம்மலாட்டம் மாதிரி நடிக்க வைச்ச அவரை சொல்வேனா...சேது மாதவன் சார்;....பண்ணவே வேணாம்...உன் கண்ணு போதும்..பார்த்துக்கிட்டே இரு...நினை என்று சொன்ன அவர்களைச் சொல்வேனா...
இந்த அனுபவங்கள் எல்லாம் வந்து நான் நடிக்கலேன்னா தான் ஆச்சரியம்..!
பாலுமகேந்திரா அவர்கள் தூபம் போட்டு வெளிக்கொண்டு வந்துருவாரு. அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்குது. நான் ஒரு நிரந்தர மாணவன். நீங்க எப்படி மாணவன்னு கூப்பிடறதுன்னு நினைச்சீங்க...
கண்டிப்பா அதை மட்டும் எங்கிட்ட இருந்து பறிச்சிடாதீங்க...எனக்கு ஆசிரியனாவதில் ஆசையே கிடையாது. மாணவனாக இருப்பதில் உள்ள சந்தோஷம் ரொம்பப் பிரமாதம்..!
இந்த 63 வருடங்களும் எனக்கு திருவிழா. நான் அதை எதிர்பார்க்கவே இல்ல. 10 ஆயிரம் ரூபா ஒரு படத்துக்கு கொடுத்தாங்கன்னா ஒரு நேரத்துக்கு ஒரு படம் தான் பண்ணுவேன்...அதுல 10 ஆயிரம் மடங்கு தாண்டிப்பேன்.
அதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.
சாப்பாடு, பசி மாதிரி தான் சினிமாவில் வெற்றி தோல்வி. ஒண்ணு வரும். அதுக்கு மருந்து சாப்பாடு. இது ஒரு சைக்கிள். இது மாறவே மாறாது. எப்படியும் நான் வெற்றியைத் தவிர கொடுக்க மாட்டேன்னு நினைச்சோம்னா அதைத் தவிர பாக்கி எல்லாம் வரும்.
ஏன்னா அது மட்டுமே குறியா இருக்கு. வெற்றி வெற்றி வெற்றின்னு. ஒரு மூடநம்பிக்கை உண்டு. தமிழ் சினிமாவில. எல்லா சினிமாவிலும் உண்டு. முதல் காட்சி வெற்றி வெற்றின்னு...வச்சிட்டு...படம் எத்தனை வெற்றியாயிருக்கு.
நாங்க முதல் வசனம் பேசுனது ஆரம்பிக்கலாமான்னு தான்..ஆரம்பிச்சிட்டோம்...எங்களுக்குத் தெரிஞ்சி. வெற்றி நீங்க கொடுத்தது.
முழுநேரம் எதுவுமாவே யாரும் இருக்க முடியாது. முழுநேர விழிப்புடன் நான் இருக்கிறேன். அப்ப அந்த 8 மணி நேரம் தூங்கினது என்ன கணக்கு? முழுநேர அரசியல்னு இருக்கவே கூடாது.
தம்பி உதயநிதி கூட முழுநேர அரசியல்வாதியா இருக்கக்கூடாது. சந்தோஷமா இருக்கணும். அப்போ அந்த அரசியல்வாதியின் செயல்பாடுகள் திருந்தச் செய்யும் வேலையாக இருக்கும்.
சினிமா....அரசியல்...ரெண்டுமே கஷ்டமில்ல. நம்முடைய நோக்கம் சரியாக இருக்கும்பட்சத்தில் எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் எதுவுமே கஷ்டமில்லை.
அதுதான்...நான் எதிர்பார்த்தது விக்ரம் வெற்றி தான்...இந்த மாதிரி வெற்றி வரணும்...இண்டஸ்ட்ரி ஹிட் வரணும்னு நான் எதிர்பார்;த்தேன்னா அதுல ஏமாற்றம் தான் வர வாய்ப்புண்டு.
சினிமா துறையில் இருப்பவர்களும், இனி வரப் போவர்களும் போட்டியாளர்கள் தான். அப்படித் தான் பார்ப்பேன். அதுல பொறாமை இருக்காது எனக்கு.
என்னுடைய நடிப்புல வந்து நாகேஷ் தெரிவாரு. சிவாஜி சார் தெரிவாரு. ரங்கராவ் தெரிவாரு. பல்ராம் நாயுடு பார்த்தா பாலையா சார் தெரிவாரு.
எங்கேயோ எல்லாருடைய சாயலும் தெரியும். நான் அத்தனை பேருடைய ரசிகன். அமெரிக்க நடிகர்களின் ரசிகன். இயக்குனர்களின் ரசிகன். ரசனை தான் என் வாழ்க்கை.
விக்ரம் 2வின் வெற்றி எனக்குக் கத்துக் கொள்...தொடர்ந்து கத்துக்கொள் என்பதைத் தான் கத்துக் கொடுத்தது.
இதுதான் கரெக்ட்னு நினைச்ச எதுவும் கரெக்டாக வரவேண்டிய அவசியமில்ல. இதெல்லாம் தப்புன்னு சொல்லி ஒதுக்கி வச்சது...அதுதான்...வேற யார் செஞ்சாலும் ஓடாதுங்கறது கர்வம்தான்.
இன்னும் சொல்லப்போனா...இந்த விக்ரமோட மூலக்கதை நாங்க பேசும்போது அது வேண்டாம்னு ஒதுக்கி வச்ச கதைதான். இதெல்லாம் சரி வராது சார்...ஆர்ட் சினிமா மாதிரி இருக்குன்னு கிண்டல் அடிச்சிட்டாங்க. நானும் பயந்து போயிட்டேன்.
இது முதல் விக்ரம் போது நடந்தது. அதையே நான் சொன்னபோது அது போதும்...விட்ருங்க. பாக்கியை நான் பார்த்துக்கறேன்னு அவரு எடுத்துட்டுப் போனாரு.
தப்பு எது...ரைட் எதுன்னு பாடம் படிச்சிக்கிட்டே இருக்கணும். விக்ரம் ஒரு பெரிய பாடம்..! சினிமா என் காதலி. அதுக்கு அப்புறம் தான் எல்லா காதலும்...!