Cinema News
வில்லன்கள் தான் நல்லது செய்வாங்களாம்… உலகநாயகனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?
கல்கி 2898 AD என்ற படத்தில் கமல் வில்லன் அவதாரம் எடுக்கிறார் என்றதும் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் பன்மடங்கு அதிகரித்து விட்டது. பிரபாஸ், அமிதாப்பச்சன் ஆகியோரும் நடிக்க படம் பான் இண்டியா மூவியாக பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கல்கி படக்குழுவினருடன் ஒரு கலந்துரையாடல் சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய கமல் கொஞ்சம் குதர்க்கமாகப் பேசியுள்ளார். இதுபற்றி பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
இதையும் படிங்க… என்னது! மகாராஜா படம் விஜய் சேதுபதிக்காக எழுதலயா? டைரக்டரே சொல்லிட்டாரே!
கல்கி படத்தில் கமல் 3 நாள் தான் நடிச்சாரு. அந்தப் படத்தோட விழாவில் கமல் பேசியது இதுதான். எனக்கு வில்லனா நடிக்கத் தான் விருப்பம். வில்லன்கள் தான் நல்லது செய்வாங்க. அப்படின்னு பேசிருக்காரு. வில்லனா நடிக்க விருப்பம் சரி தான். ஏன்னா எல்லா கலைஞருக்கும் எல்லா வேடத்தையும் பார்க்கணும்னு ஒரு எண்ணம் வரும். ஆனா கூடவே ஒரு வார்த்தையை விட்டுருக்காரு.
வில்லன்கள் தான் நல்லது செய்வாங்கன்னு. அவர் எந்த நிலையில அப்படி சொன்னாருன்னு தெரியல. கடவுள் நல்லது செய்வார். சாத்தான் கெடுதல் செய்வார். இதுதான் நடைமுறை. இப்படித்தான் சினிமாவிலும் நடந்துருக்கு. ஆனா அவரு என்னன்னா கொஞ்சம் மாத்தி குழப்பமா பேசிருக்காரு.
இவரு காலத்துக்குப் பிறகு பிரபாஸ் ஹீரோவா நடிக்காரு. இவரு வில்லனா நடிக்காரு. கமலுக்குப் படம் இல்லாமப் போச்சான்னா அப்படியும் இல்லை. இப்பவும் இந்தியன் 2, தக் லைஃப்னு பிசியா நடிக்காரு. ஆனா கமல் ஏன் இப்படிப் பேசினாருன்னு கேள்விக்குறியாவே இருக்கு. கமல் பேசுனது பெரிய குழப்பமாவே இருக்கு. எதுக்கு இப்படி பேசுனாரு? அவரோட ரசிகர்கள் என்ன நினைப்பாங்க? பொதுவெளியில மக்கள் என்ன நினைப்பாங்கன்னு யோசிக்காம பேசிருக்காரு.
இதையும் படிங்க… 150 ரூபாய்க்கு குவார்ட்டர் வாங்க காசில்லாம 50 ரூபாய்க்கு சாராயம் வாங்கி குடிக்கிறாங்க!.. பொங்கிய சூர்யா!..
ஒருவேளை இப்படி பேசுனா படம் பிரபலமாகும்னு பேசுனாரா? தன்னோட கேரக்டர் பேசப்படும்னு கூட பேசிருக்கலாம். இன்னொன்னு தெரியாத்தனமா படத்துல மாட்டிக்கிட்டோமோ… சமாளிப்போமேன்னு கூட பேசிருக்கலாம். எப்படி பேசினாலும் படத்துக்கு விளம்பரம் தானேன்னு பேசியிருக்கலாம். இல்லன்னா படத்தோட கதைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.