கண்ணு முன்னாடி ஆண்டவர்....அதிர்ச்சியில் ரசிகர்கள்....! கலங்க வைத்த கமல் வீடியோ...!
ஆண்டவர் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கமல் ரசிகர்களிடமும் சரி ஒட்டுமொத்த இந்தியாவையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு மக்களுக்கு விருந்து படைக்க காத்துக் கொண்டிருக்கும் கமல் ஜூன் 3ஆம் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் மூலம் மக்களை சந்திக்க வருகிறார். அரசியலில் தன் கவனத்தை செலுத்திய கமல் மறுபடியும் திரைப்பிரவேஷம் எடுத்திருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு பிரபல தனியார் நிறுவனம் கமல் ரசிகர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் கமலை ஏன் கொண்டாடுகிறீர்கள்? என்ற தலைப்பில் ஒவ்வொரு ரசிகர்களும் பேசிக் கொண்டிருக்கையில் ரசிகர்களின் பின்னால் நின்று கொண்டு கமல் அவர்களை ஆச்சரியத்தில் உள்ளாக்கினார். மேலும் கமலை பார்த்த அதிர்ச்சியில் ஒரு சில ரசிகர்கள் கண்ணீர் மல்க அவரை கட்டிப் பிடித்தனர்.
அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இவர் மேல் உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. படம் வெளியான பின் அவர்களின் உணர்வு எப்படி இருக்கும் என்று படம் தான் சொல்லும். பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த வீடியோ:
Courtesy to Sonymusic