தசாவதாரம் படத்திற்கு இசையமைக்க மறுத்த இசைப்புயல்...காரணம் கேட்டு கடுப்பான கமல்....
2008 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் தசாவதாரம். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமல் 10 வேடங்களில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் பிரமிப்பில் ஆழ்த்திய படமாக இது அமைந்தது.
இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் இசையமைப்பாளர் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு டீம். முதலில் இந்த படத்திற்கு ஏஆர். ரகுமான் தான் இசையமைக்க இருந்ததாம். ஆனால் கல்லை மட்டும் கண்டால் பாடலின் கதையை கேட்டு முடியாது என ரவிக்குமாரிடம் கூறிவிட்டாராம் ரகுமான். அதன் பின்னனியில் இருக்கும் காரணத்தை பத்திரிக்கையாளர் கல்யாண்குமார் என்பவர் விவரித்தார்.
இதையும் படிங்கள் : லிங்குசாமிக்கு கை கொடுக்கும் ராகவா லாரன்ஸ்….கூடவே நம்ம லோகேஷும் சேர்ந்தா எப்படி இருக்கும்?..
ஏற்கெனவே ரகுமானை சன் டிவி நிகழ்ச்சிக்காக பேட்டி எடுத்து அடுத்த நாள் டெலிகாஸ்ட் பண்ண தயாராக இருந்ததாம். அதற்கு முன்னர் அந்த வீடியோவை பார்த்த ரகுமானின் அம்மா இவரை அழைத்து கோபப்பட்டாராம். ஏனெனில் பேட்டியின் முடிவில் கே.எஸ்.பாகவதர் கைகூப்பி வணங்குவது போல் முடிக்கப்பட்ட்ருக்குமாம். ஒரு இந்து இவரை வணங்குவது போன்ற காட்சிகளை பார்த்து கோபப்பட்டு அந்த சீனையே கட் பண்ண சொன்னார்களாம்.
அதனால் தான் இந்த பாடல் முழுவதும் ஒரு இந்து கடவுளை மையமாக வைத்து இருப்பதால் கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார் என அந்த பத்திரிக்கையாளர் முன்பே ரவிக்குமாரிடம் சொல்லியிருக்கிறார். கூடவே செக் பணமும் கொண்டு போயிருக்கிறார்கள். அதையும் வேண்டாம் என கூறி இந்த படத்தில் என்னால் இசையமைக்க முடியாது என சொல்லிவிட கமல் கோபத்தில் மும்பை பறந்து ஒரு பெரிய டீமையே வரவழைத்து பாடல்கள் அனைத்தையும் செம ஹிட் செய்துள்ளார்.