More
Categories: Cinema News latest news

எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா!.. ரீ ரிலீஸ் படங்களை போட்டு ஓட்டுற நிலைமைக்கு வந்த கமலா தியேட்டர்!..

தமிழ் சினிமாவில் புதிதாக வெளியாகும் மொக்கைப் படங்களை பார்க்க ரசிகர்கள் விரும்பாத நிலையில், திடீரென கமலா தியேட்டரில் போடப்பட்டுள்ள ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர என்ன காரணம் என யோசித்தால், அதற்கான விளக்கத்தை கமலா தியேட்டர் ஓனர் தெரிவித்துள்ளார்.

கமலா தியேட்டரா? கே டிவியா? என கிண்டல் செய்யும் அளவுக்கு எங்க தியேட்டர் மாறிடுச்சு என சிரித்துக் கொண்டே சொல்லும் அவர் காதலர்கள் மற்றும் இளைஞர்களுக்காக காதலுக்கு மரியாதை, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை போட்டும் கூட்டம் அள்ளியது.

Advertising
Advertising

இதையும் படிங்க: கருப்பு சேலையில் கலக்குறியேம்மா!.. கண்ணெல்லாம் கண்டபடி மேயுதே!.. அராத்தி இவ்ளோ அழகா?..

இது நல்லா இருக்கே என தற்போது ரஜினிகாந்த் நடித்து வெளியான அண்ணாமலை, விஜய்யின் திருமலை, அஜித்தின் வாலி மற்றும் பில்லா, குடும்பத்துடன் ரசிகர்கள் சிரித்துப் பார்க்க சிவா மனசுல சக்தி இப்படி பல படங்களை திரையிட்டு வருகிறோம்.

புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் விருப்பம் தெரிவிப்பதில்லை. அந்தளவுக்கு தரமான படங்களும் சமீபத்தில் வெளியாகவில்லை. தியேட்டரில் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்வதால் ரசிகர்கள் வருகின்றனர்.

இதையும் படிங்க: வாய்வலிக்க முத்தம் கொடுத்துட்டு இப்போ CM.. விஜயை மறைமுகமாக தாக்கிய மன்சூர் அலிகான்

கல்லூரி மாணவர்கள் எல்லாம் காலேஜ் கட் அடிச்சிட்டு ஐடி கார்டுடன் வந்து வைப் பண்ணுவது ரொம்பவே சூப்பரா இருக்கு எனக் கூறியுள்ளார்.

வெறும் 49 ரூபாய் மற்றும் 69 ரூபாய் தான் டிக்கெட் விலை. அப்படி விலையை குறைத்த நிலையில் தான் தியேட்டருக்கு ரசிகர்கள் வருகின்றனர். புதிய படங்களுக்கும் இதே போல விலை வைத்தால் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆகும் இல்லையென்றால் காத்து தான் வாங்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts