ரசிகர்களான உங்களுக்கு கடமை இருக்கு...எது நல்ல படம்னு நீங்க தான் முடிவு பண்ணனும்...கமல் ஓபன் டாக்
பிரபு சாலமன் இயக்கத்தில் அஷ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமையா நடிப்பில் உருவான செம்பி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் இவ்வாறு பேசுகிறார்.
பெரிய படங்களுக்கும் போறார். சின்ன படங்களுக்கும் போறார்னு இந்த மேடையில சொல்ல முடியாது. அங்கிருந்து பார்க்குறவங்களுக்குத் தான் சொல்ல முடியும்.
16 வயதினிலே படத்தை 40 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படத்தை இன்னைக்கு ஞாபகம் வச்சிக்கிட்டு பேசுறோம்னா அதுதான் பெரிய படம். இத்;தனை கோடில எடுத்தோம்...அது என்ன படம்னு கேக்குறோம்ல. அதான் சின்ன படம்.
சின்னப்படம், பெரிய படம்னு சொல்ல முடியாது. தழல் குஞ்சொன்றும் மூப்பொன்றும் உண்டோ...ங்கற மாதிரி வைக்கிற காடு தான் முக்கியம். அது எங்க காடு. கொடைக்கானல் காட்டுல பார்த்து வச்சிருக்கீங்க. முக்கியமான கரு நல்ல கரு. அது முக்கியமான விஷயம். நம்மோட அமைதி தான் பெரிய ஆபத்து. இதை ஏன் இப்படி பண்றேன்னு கேட்குறதுக்கு ஆளே இல்லன்னா தொடர்ந்து இதுமாதிரி தவறுகளா வரும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கு.
ரசிகர்களாகிய உங்கள் கடமை...நல்லா இருக்குற படத்தை நல்லாருக்குன்னு சொல்லணும். நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லன்னு தைரியமா சொல்லணும். எத்தனை கோடி செலவு பண்ணிருந்தாலும் அதைப் பத்தி நீங்க பயப்படக்கூடாது. நல்ல நடிகனின் மீது வெளிச்சம் படணும்னா நீங்க நல்ல படத்தின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டணும்.
நான் கோவை சரளாவைப் பாராட்டுவது நிஜமாகவே அந்தத் திறமை பளிச்சிட வேண்டும். தம்பி ராமையாவையும் அப்படித் தான். நிலாவும் அப்படித்தான். சிறுவயதில என்னோடயே விளையாடிக்கிட்டு இருந்தவங்க...நான் செய்த எல்லா விஷயங்களையும் செய்தவங்க வாய்ப்பு கிடைக்காம காணாமலே போயிருக்காங்க.
அதுக்கு யார் பொறுப்புன்னு யோசிச்சிப் பார்த்தோம்னா என் பொறாமை பொறுப்பா இருந்துருக்குமோன்னு நான் கண்ணாடில பார்ப்பேன். ரசனை வளர வேண்டும். அதுக்காகத் தான் என்னோட வாழ்க்கையின் மெசேஜாக ரசனையை வளர்ப்பது என் கடமை என்று நான் எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
அது என்ன இவரு வளர்க்குறதுன்னு கேட்கலாம். யார் வேணும்னாலும் வளர்க்கலாம்க. ஒரு விதை..ஒரு செடி அது வளர்ந்துரும். பறந்து போற பறவைக்குத் தெரியாது. நாம் ஒரு காட்டை விதைத்துக் கொண்டிருக்கிறோம் என்று. கடமை செய்து கொண்டு போய் இருக்கிறது. அந்த மாதிரி ஒரு பறவை தான் நான். அதுக்காகத் தான் நான் இங்க வந்துருக்கேன்..